/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ மானிய விலையில் விதைநெல் விவசாயிகளுக்கு அழைப்பு மானிய விலையில் விதைநெல் விவசாயிகளுக்கு அழைப்பு
மானிய விலையில் விதைநெல் விவசாயிகளுக்கு அழைப்பு
மானிய விலையில் விதைநெல் விவசாயிகளுக்கு அழைப்பு
மானிய விலையில் விதைநெல் விவசாயிகளுக்கு அழைப்பு
ADDED : ஜூன் 28, 2024 10:57 PM
திருத்தணி:திருத்தணி ஒன்றியத்தில், 27 ஊராட்சிகளில் பெரும்பாலானோர் விவசாயத்தை நம்பியே வாழ்கின்றனர். மேலும்,விவசாயிகள் நெல், கரும்பு, வேர்க்கடலை மற்றும் காய்கறி போன்ற பயிர்கள் அதிகளவில் செய்கின்றனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெய்துவரும் பருவ மழையால் விவசாயக் கிணறுகள் மற்றும் நீர்நிலைகளில் மழைநீர் தேங்கி நிற்பதால் நிலத்தடி நீர் மட்டும் வெகுவாக உயர்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் நெல் பயிரிடுவதிலும், விதைநெல் கொள்முதல் செய்வதிலும் ஆர்வம் காட்டுகின்றனர்.
இதுகுறித்து திருத்தணி வேளாண் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தற்போது சொர்ணவாரி பருவத்தில் விவசாயிகள் ஏ.டி.டி., 37 என்னும் குண்டுநெல், ஏ.டி.டி.,54, வெள்ளை பொன்னி போன்ற சன்னரக நெல் விதைகள் மானிய விலையில், திருத்தணி மற்றும் கே.ஜி.கண்டிகை வேளாண்மை விரிவாக்க மையத்தில் விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிலோ நெல் விதை, 38 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. குண்டு நெல், 15,000 கிலோ, ஏ.டி.டி.54 நெல், 6,000 கிலோ, வெள்ளை பொன்னி, 3,000 கிலோ இருப்பு உள்ளது.
விதைநெல் தேவைப்படும் விவசாயிகள் ஆதார் கார்டு, கணினி சிட்டா ஆகியவற்றுடன் வந்து மானிய விலையில் நெல் விதைகளை வாங்கிக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.