/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ ஓடைக்கால்வாயில் மணல் திருட்டு கேபிள் கம்பங்கள் உடைந்து சேதம் ஓடைக்கால்வாயில் மணல் திருட்டு கேபிள் கம்பங்கள் உடைந்து சேதம்
ஓடைக்கால்வாயில் மணல் திருட்டு கேபிள் கம்பங்கள் உடைந்து சேதம்
ஓடைக்கால்வாயில் மணல் திருட்டு கேபிள் கம்பங்கள் உடைந்து சேதம்
ஓடைக்கால்வாயில் மணல் திருட்டு கேபிள் கம்பங்கள் உடைந்து சேதம்
ADDED : ஜூன் 29, 2024 02:02 AM

பொன்னேரி:தமிழ்நாடு பைபர்நெட் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் வாயிலாக, மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்கள் தோறும் இணையதள வசதி ஏற்படுத்துவதற்காக, கேபிள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இப்பணிகளுக்காக, சாலையோரங்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டு, அதில் பிளாஸ்டிக் உருளை மற்றும் கேபிள் பதிக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது.
பெரும்பாலான இடங்களில் சிமென்ட் கம்பங்கள் அமைத்து அவற்றின் வாயிலாக ஒரு கிராமத்தில் இருந்து மற்றொரு கிராமத்திற்கு கேபிள் பொருத்தப்படுகிறது.
பொன்னேரி அடுத்த ரெட்டிப்பாளையம் கிராமத்தில் இருந்து வேலுார் கிராமத்திற்கு இணையதள வசதிக்காக கம்பங்கள் அமைத்து கேபிள் கொண்டு செல்லப்பட்டது.
கடந்த ஒரு மாதமாக வேலுார் பகுதியில் உள்ள ஓடைக்கால்வாயில் மணல் மற்றும் சவுடு மண் திருட்டு நடைபெறுகிறது. இரவு நேரங்களில் மண் திருட்டில் ஈடுபட்டு வரும் லாரிகள், வேகமாக பயணித்து, ரெட்டிப்பாளையம் - வேலுார் சாலையில் அமைக்கப்பட்டிருந்த இணையதள சேவைக்காக பதிக்கப்பட்ட சிமென்ட் கம்பங்களை உடைத்து சேதப்படுத்தி உள்ளன. கேபிள்களும் அறுந்து கிடக்கின்றன.
இவை ஒவ்வொன்றாக உடைந்தும், கேபிள்கள் அறுந்தும் கிடக்கும் நிலையில், இதுவரை எந்தவொரு அதிகாரியும் அங்கு பார்வையிட்டு நடவடிக்கை எடுக்கவில்லை. மணல் கொள்ளையர்களின் அட்டகாசத்தால், அங்குள்ள மின் கம்பங்களுக்கும் ஆபத்து உருவாகி உள்ளது.
ஓடைக்கால்வாயில் இரவு நேரங்களில் நடைபெறும் மணல், சவுடு மண் திருட்டை தடுக்கவும், இணையதள சேவைக்கு பொருத்தப்பட்ட சிமென்ட் கம்பங்கள் மற்றும் கேபிள்களை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.