/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ கள்ளச்சாராயத்தை ஒழிக்க விழிப்புணர்வு கூட்டம் கள்ளச்சாராயத்தை ஒழிக்க விழிப்புணர்வு கூட்டம்
கள்ளச்சாராயத்தை ஒழிக்க விழிப்புணர்வு கூட்டம்
கள்ளச்சாராயத்தை ஒழிக்க விழிப்புணர்வு கூட்டம்
கள்ளச்சாராயத்தை ஒழிக்க விழிப்புணர்வு கூட்டம்
ADDED : ஜூன் 29, 2024 02:02 AM

திருத்தணி:கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து, 60க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.
இதையடுத்து தமிழகத்தில் கள்ளச்சாராய விற்பனை தடுக்கவும், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என டி.ஜி.பி., உத்தரவு பிறப்பித்தார்.
அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டம், நல்லாட்டூர் கிராமத்தில் கள்ளச்சாராயம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி ஊராட்சி மன்ற தலைவர் கலையரசி தலைமையில் நேற்று முன்தினம் நடந்தது.
இதில் பங்கேற்ற பெண்கள் பேசியதாவது:
அரசு டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்கள் விலை அதிகம் என்பதால் ஆந்திர மாநில எல்லையான எங்கள் கிராமங்களில் கூலித் தொழிலாளிகள் ஆந்திர மாநில கள்ளச்சாராயத்தை குடித்து வருகின்றனர்.
இதை தமிழக-, ஆந்திர போலீசார் கூட்டு நடவடிக்கை எடுத்து கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் கடத்தலை தடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.
இதையடுத்து திருத்தணி டி.எஸ்.பி., விக்னேஷ் பேசியதாவது:
திருத்தணி வருவாய் கோட்டம், தமிழக- ஆந்திர மாநில எல்லைப் பகுதிகளில் உள்ளன.
அந்த வகையில், நல்லாட்டூர், என்.என். கண்டிகை, நெமிலி, சிவாடா, அரும்பாக்கம் போன்ற கிராமங்களில் கள்ளச்சாராயம் விற்பனை செய்வது வருத்தம் அளிக்கிறது. தமிழக எல்லை கிராமங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சுவது கிடையாது. ஆனால் அருகே உள்ள ஆந்திர மாநிலத்தில் சிலர் கள்ளச்சாராயம் காய்ச்சி தமிழக எல்லையோர கிராமங்களில் விற்பனை செய்கின்றனர்.
குடும்ப சூழ்நிலை காரணமாக கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருட்களில் விற்பனையில் ஈடுபட்ட நபர்கள் திருந்தி வாழ்வதற்கு மாவட்ட நிர்வாகம் மூலம் நிதி உதவி பெற்று சிறுதொழில் தொடங்க ஏற்பாடு செய்யப்படும்.
கள்ளச்சாராயம் காய்ச்சுதல், கடத்துதல், விற்பனை செய்வது பற்றி தகவல் தெரிந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.