/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ நெடுஞ்சாலை மீடியனில் கருகி வரும் செடிகள் நெடுஞ்சாலை மீடியனில் கருகி வரும் செடிகள்
நெடுஞ்சாலை மீடியனில் கருகி வரும் செடிகள்
நெடுஞ்சாலை மீடியனில் கருகி வரும் செடிகள்
நெடுஞ்சாலை மீடியனில் கருகி வரும் செடிகள்
ADDED : ஜூன் 03, 2024 04:43 AM

திருவள்ளூர்: திருமழிசை - ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில், திருமழிசையில் இருந்து மணவாள நகர் வரை, சாலையின் நடுவே உள்ள மீடியனில், கடந்த சில மாதங்களுக்கு முன் அலங்கார செடிகளான செவ்வரளி, மஞ்சள் அரளி போன்ற செடிகள் வளர்க்கப்படுகின்றன.
இந்த பூஞ்செடிகள் பருவநிலை மாற்றத்திற்கு ஏற்ப சிகப்பு, மஞ்சள், வெள்ளை உள்ளிட்ட பல்வேறு வண்ண மலர்கள் பூத்து குலுங்கும்.
இதனால், வாகனங்களில் செல்லும்போது சாலையின் நடுவில் உள்ள அலங்கார செடிகள் பூத்து குலுங்கும்போது பார்ப்போர் கண்ணுக்கு குளிர்ச்சியையும், மனதுக்கு ரம்மியமாகவும் காட்சியளிக்கும்.
சாலையில் வெப்பத்தை தணித்து, குளிர்ந்த காலநிலை நிலவ இந்த அலங்கார பூச்செடிகள் வழிவகுக்கிறது.
நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள், அலங்கார செடிகளுக்கு இடையில் வளரும் களைகளை வெட்டி, வாகனங்கள் மூலம் தண்ணீர் விட்டு பராமரிக்க வேண்டும்.
ஆனால், திருமழிசை பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன் வைக்கப்பட்ட செடிகள் போதிய பராமரிப்பு பணி மேற்கொள்ளததால், தற்போது கருகி வருகின்றன.
இது வாகன ஓட்டிகள் மற்றும் பயணியரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, மீடியனில்ல் உள்ள செடிகளை தண்ணீர் ஊற்றி பராமரிக்க, நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் மற்றும் பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.