ADDED : ஜூன் 11, 2024 08:54 PM
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த ஈகுவார்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரபாபு மனைவி செல்வி, 44. இவருக்கு சொந்தமான இரு எருமை மாடுகளை நேற்று மாலை, அப்பகுதியில் மேய்த்துக்கொண்டிருந்தார். அப்போது மின் கம்பி அறுந்து விழுந்ததில், ஒரு எருமை மாடு பலியானது.
மற்றொரு எருமை மாடு காயம் அடைந்தது. உரிய இழப்பீடு வழங்கி வலியுறுத்தி, அரசை கண்டித்து மாட்டின் உரிமையாளரும், அவர்களது உறவினர்களும், ஈகுவார்பாளையம் கிராமத்தில் உள்ள மாதர்பாக்கம் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினர்.
தகவல் அறிந்து சென்ற பாதிரிவேடு போலீசார் சமாதானம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன்பின் கலைந்து சென்றனர்.