/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ சேப்பங்கிழங்கு சாகுபடியில் அசத்தும் பீமாரெட்டியூர் சேப்பங்கிழங்கு சாகுபடியில் அசத்தும் பீமாரெட்டியூர்
சேப்பங்கிழங்கு சாகுபடியில் அசத்தும் பீமாரெட்டியூர்
சேப்பங்கிழங்கு சாகுபடியில் அசத்தும் பீமாரெட்டியூர்
சேப்பங்கிழங்கு சாகுபடியில் அசத்தும் பீமாரெட்டியூர்
ADDED : ஜூன் 09, 2024 11:10 PM

ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை ஒன்றியம், பீமாரெட்டியூர், கிருஷ்ணாகுப்பம், மயிலாடும்பாறை உள்ளிட்ட கிராமங்கள், மலைச்சரிவில் அமைந்துள்ளன.
இந்த பகுதியில் உணவு தானிய பயிர்களை காட்டிலும் காய்கறி
செடிகள் செழிப்பாக வளர்கின்றன. மலைச்சரிவான பகுதியில் மழைநீர் தேங்கி நிற்காது என்பதால், காய்கறி விவசாயத்திற்கு இந்த பகுதி ஏற்றதாக உள்ளது.
இந்த பகுதியில் சேப்பங்கிழங்கு, கத்தரிக்காய், வெண்டை, பீர்க்கன், பாகற்காய், முள்ளங்கி உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர்.
மாலையில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் இங்கு காய்கறிகள் பறிப்பதில் ஈடுபட்டிருப்பதை காணமுடியும். இங்கு பயிரிடப்படும் காய்கறிகள் தினசரி பறிக்கப்பட்டு, சென்னை கோயம்பேடு சந்தைக்கு நேரடியாக லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகிறது.
காய்கறி விவசாயத்தில் பீமாரெட்டியூர் பிரபலமடைந்து வருகிறது. இப்பகுதியில் கீரை மற்றும் கனகாம்பரம், கோழிக்கொண்டை மலர், சாமந்தி, சம்பங்கி உள்ளிட்டவையும் அதிகளவில் பயிர் செய்யப்படுகிறது.