/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ பராமரிப்பு இல்லாத நிலையில் பேரம்பாக்கம் பஸ் நிலையம் பராமரிப்பு இல்லாத நிலையில் பேரம்பாக்கம் பஸ் நிலையம்
பராமரிப்பு இல்லாத நிலையில் பேரம்பாக்கம் பஸ் நிலையம்
பராமரிப்பு இல்லாத நிலையில் பேரம்பாக்கம் பஸ் நிலையம்
பராமரிப்பு இல்லாத நிலையில் பேரம்பாக்கம் பஸ் நிலையம்
ADDED : ஜூலை 23, 2024 12:58 AM

கடம்பத்துார், கடம்பத்துார் ஒன்றியத்தில், முதல்நிலை ஊராட்சியான, பேரம்பாக்கம் ஊராட்சியில் உள்ள பேருந்து நிலையம். கடந்த 2007-08 ம் ஆண்டு ஸ்ரீபெரும்புதுார் எம்.பி, தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது.
இந்த பேருந்து நிலையத்தை பயன்படுத்தி, பேரம்பாக்கம் மற்றும் அதை சுற்றியுள்ள நரசிங்கபுரம், கூவம் இருளஞ்சேரி, காவாங்கொளத்துார், சிற்றம்பாக்கம் சத்தரை என 25க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சென்னை, திருவள்ளூர், அரக்கோணம் போன்ற பல பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
இந்த பேருந்து நிலையம் திறப்பு விழா நடந்து 15 ஆண்டுகளாகியும் இதுவரை எவ்வித பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளவில்லை என பகுதிவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் இங்குள்ள பேருந்து நிலையத்தில் இருக்கை வசதி, குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாததால் பயணியர் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
'குடி'மகன்களின் கூடாரமாக மாறி குப்பை சேகரமாகி பரிதாபமான நிலையில் உள்ளது பயணியரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பேருந்து நிலையத்தை ஆய்வு செய்து அடிப்படை வசதிகள் செய்து தரவும், சாலையை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணியர் மற்றும் பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பேருந்து சேவை அவசியம்
திருவாலங்காடு ஒன்றியத்துக்கு உட்பட்டது பூனிமாங்காடு, நல்லாட்டூர், அரும்பாக்கம், நெமிலி, மாமண்டூர் உள்ளிட்ட ஊராட்சிகள். இந்த ஊராட்சிகளுக்கு உட்பட்டு 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
இந்த பகுதிவாசிகள் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வேளாண் அலுவலகம், வட்டார கல்வி அலுவலகம் உள்ளிட்டவற்றிற்கு செல்ல திருவாலங்காடு செல்ல வேண்டி உள்ளது.
மேற்கண்ட பகுதியில் இருந்து திருவாலங்காடுக்கு செல்ல பேருந்து வசதி இல்லாததால் அப்பகுதிவாசிகள் பல்வேறு சிரமங்களை அனுபவித்து வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதிவாசிகள் கூறியதாவது:
திருவாலங்காடு செல்ல தடம் எண். 97 - திருத்தணி - - திருவாலங்காடு கூட்ரோடு வழியாக திருவள்ளூர் செல்லும் ஒரே ஒரு பேருந்து சேவை மட்டுமே உள்ளது.
அதற்கும் எங்கள் கிராமத்தில் இருந்து, 6 -- 10 கி.மீ., தூரம் ஆட்டோவிலோ, இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டு சென்னை -- திருப்பதி தேசிய நெடுஞ்சாலைக்கு சென்று பேருந்து பிடித்து செல்ல வேண்டி உள்ளது.
எனவே பூனிமாங்காடு- - -திருவாலங்காடுக்கு பேருந்து சேவை இயக்கும் பட்சத்தில் மேற்கண்ட 30 கிராம மக்கள் பேருந்து சேவை பெற முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.