/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ மாம்பழ கழிவுகளால் துர்நாற்றம் ஆரம்பாக்கம் ரயில் நிலைத்தில் அவலம் மாம்பழ கழிவுகளால் துர்நாற்றம் ஆரம்பாக்கம் ரயில் நிலைத்தில் அவலம்
மாம்பழ கழிவுகளால் துர்நாற்றம் ஆரம்பாக்கம் ரயில் நிலைத்தில் அவலம்
மாம்பழ கழிவுகளால் துர்நாற்றம் ஆரம்பாக்கம் ரயில் நிலைத்தில் அவலம்
மாம்பழ கழிவுகளால் துர்நாற்றம் ஆரம்பாக்கம் ரயில் நிலைத்தில் அவலம்
ADDED : ஜூன் 09, 2024 11:12 PM

கும்மிடிப்பூண்டி: சென்னை சென்ட்ரலில் இருந்து ஆந்திரா, மேற்கு வங்கம், உத்திரபிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களை இணைக்கும் முக்கிய ரயில் பாதையில் தமிழகத்தின் கடைக்கோடி ரயில் நிலையமாக ஆரம்பாக்கம் உள்ளது.
ஆந்திர மாநிலம் சூளூர்பேட்டை, நெல்லுாரில் இருந்து சென்னை சென்ட்ரல் வரை இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்கள், ஆரம்பாக்கம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும். அதனால், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், வியாபாரிகள், வேலைக்கு செல்பவர்கள் என ஆயிரக்கணக்கான ரயில் பயணியர் ஆரம்பாக்கம் ரயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பகல் நேரத்தில் மாம்பழ வியாபாரிகளின் தொழில் கூடம் போன்றும், இரவில் குடி மையம் போன்றும் ஆரம்பாக்கம் ரயில் நிலையம் காணப்படுகிறது. மாம்பழ கழிவுகள், மாம்பழங்களை மூட பயன்படுத்தப்படும் காகித கழிவுகள், மது பாட்டில்கள் சூழ்ந்து காணப்படுகிறது.
மாம்பழ கழிவுகள் அதிக அளவில் சூழ்ந்து இருப்பதால், ரயில் நிலைய வளாகம் முழுதும், துர்நாற்றம் வீசுகிறது. அவ்வழியாக கடந்து செல்லும் ரயில் பயணியர் முகச் சுழிப்புக்கு ஆளாகின்றனர்.
ரயில்வே நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்து குடி மையமாக பயன்படுத்துபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோன்று, மாம்பழ கழிவுகளை ரயில் நிலைய வளாகத்தில் குவிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில் பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.