/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி
கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி
கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி
கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி
ADDED : ஜூன் 06, 2024 01:59 AM

திருவள்ளூர்:திருத்தணி அடுத்த திருவாலங்காடு ஒன்றியம் சின்னம்மாபேட்டை ஊராட்சியில் வசித்து வருபவர் கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் பாபு. இவரது மனைவி யசோதா. இவர்கள், அதே பகுதியில் மாவு அரைக்கும் மில் நடத்தி வருகின்றனர்.
இதிலிருந்து வரும் சத்தம் அதிகமாக இருப்பதால், வீடுகளில் வசிக்க முடியவில்லை என, மாவு மில் அருகில் உள்ள ஏழுமலை, 45, என்பவர், திருவள்ளூர் கலெக்டர் மற்றும் சுற்றுச்சூழல் துறை அதிகாரிகளிடம் புகார் மனு அளித்திருந்தார்.
இதிலிருந்து வரும் சத்தம் ஏழுமலை மற்றும் அவரது மனைவி தேவகி ஆகியோரின் பிள்ளைகள் படிப்பிற்கு இடையூறாகவும், மன உளைச்சல் ஏற்படுத்துவதாகவும் புகார் மனுவில் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, நேற்று காலை கலெக்டர் அலுவலக நுழைவாயிலில், மண்ணெண்ணெய் ஊற்றி ஏழுமலை தற்கொலைக்கு முயன்றார்.
அங்கு, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.
அதேபோல், ஏழுமலை கடந்த வாரம் திருவாலங்காடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மனைவி மற்றும் குழந்தையுடன் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றது குறிப்பிடத்தக்கது.