ADDED : ஜூன் 06, 2024 01:58 AM
திருவள்ளூர்:திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் அருகே சிவன் கோவில் உள்ளது. நேற்று மதியம் 1:00 மணியளவில், கோவில் வளாகத்தில் ஒன்பது பேர் தூங்கி கொண்டிருந்தனர்.
அப்போது, சிவன் கோவில் பின்புறம் உள்ள அடர்ந்த மரங்கள் பகுதியில் இருந்த தேன் குளவி கூண்டில் இருந்த குளவிகள் தன்னிச்சையாக வெளியே வந்து, பெரியகுப்பம் சண்முகம், 62, என்பவரை கொட்டின.
மேலும், கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் இருந்த ஆட்டோ ஓட்டுனர் சுப்பிரமணி, 58, மற்றும் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த பொதுமக்கள் என, 9 பேரை குளவிகள் கொட்டியதில் பலத்த காயமடைந்தனர்.
உடனடியாக, அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், தண்ணீர் மற்றும் புகை அடித்ததில் அங்கிருந்த குளவிகள் சென்று விட்டன.