/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ 'லிங்க்'கை தொட்டதும் 'ஷாக்' நர்சிடம் ரூ.50,000 'அபேஸ்' 'லிங்க்'கை தொட்டதும் 'ஷாக்' நர்சிடம் ரூ.50,000 'அபேஸ்'
'லிங்க்'கை தொட்டதும் 'ஷாக்' நர்சிடம் ரூ.50,000 'அபேஸ்'
'லிங்க்'கை தொட்டதும் 'ஷாக்' நர்சிடம் ரூ.50,000 'அபேஸ்'
'லிங்க்'கை தொட்டதும் 'ஷாக்' நர்சிடம் ரூ.50,000 'அபேஸ்'
ADDED : ஜூன் 06, 2024 12:49 AM
கொளத்துார்:கொளத்துார், பூம்புகார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் முருகேஸ்வரி,46; ஸ்டான்லி மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார்.
கடந்த 3ம் தேதி இரவு, தன் வங்கி கணக்கு விபரங்களை பார்க்க, கணினியில் 'எஸ்.பி.ஐ., நெட் பேங்கிங்' இணையதள பக்கத்தை திறந்துள்ளார்.
அப்போது அவருக்கு ஒரு, 'லிங்க்' வந்துள்ளது. அதை தொட்டவுடன், வங்கி கணக்கின் பயனாளர் பெயர், கடவுச்சொற்களை பதிவு செய்ய அறிவுறுத்தியது.
அதை ஏற்று, அவரும் பதிவு செய்தார். அடுத்ததாக, ஆதார் எண்ணை பதிவு செய்யும்படி கூற, சந்தேகம் அடைந்த முருகேஸ்வரி, அந்த 'லிங்க்'கில் இருந்து வெளியே வந்துள்ளார்.
ஆனாலும் சற்று நேரத்தில், அவரது வங்கி கணக்கில் இருந்து, 50,000 எடுக்கப்பட்டுள்ளது. அதிர்ச்சியடைந்த அவர், இதுகுறித்து ராஜமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
l கொளத்துார், சாந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன், 46; தனியார் நிறுவன ஊழியர். இவர், கடந்த 3ம் தேதி இரவு 'பேஸ்புக்' பக்கத்தில் பதிவுகளை பார்த்துள்ளார்.
அப்போது, அவரது நண்பர் செந்தில் என்பவரின் பேஸ்புக் முகவரியில் இருந்து, அவசரமாக 12,500 ரூபாய் கேட்டு குறுஞ்செய்தி வந்துள்ளது.
இதை நம்பி, குறிப்பிட்ட மொபைல்போன் எண்ணுக்கு பணம் அனுப்பியுள்ளார்.
உடனே செந்திலை தொடர்பு கொண்டு விசாரித்த போது, தான் பணம் கேட்கவில்லையென அவர் கூறியுள்ளார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மணிகண்டன், ராஜமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.