/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ ஆடிக்கிருத்திகை விழா திருத்தணியில் ஆலோசனை ஆடிக்கிருத்திகை விழா திருத்தணியில் ஆலோசனை
ஆடிக்கிருத்திகை விழா திருத்தணியில் ஆலோசனை
ஆடிக்கிருத்திகை விழா திருத்தணியில் ஆலோசனை
ஆடிக்கிருத்திகை விழா திருத்தணியில் ஆலோசனை
ADDED : ஜூன் 12, 2024 02:14 AM
திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலில் ஆண்டுதோறும், ஆடிக்கிருத்திகை மற்றும் மூன்று நாள் தெப்பத்திருவிழா ஐந்து நாட்கள் வெகுவிமரிசையாக நடந்து வருகிறது.
நடப்பாண்டிற்கான ஆடிக்கிருத்திகை மற்றும் தெப்பத்திருவிழா அடுத்த மாதம், 27 ம் தேதி முதல், 31ம் தேதி வரை நடக்கிறது.
நேற்று திருத்தணியில் உள்ள முருகன் கோவிலின் தலைமை அலுவலகத்தில் ஆடிக்கிருத்திகை முன்னேற்பாடுகள் குறித்து அறங்காவலர் குழுத் தலைவர் ஸ்ரீதரன் தலைமையில், இணை ஆணையர் ரமணி, அறங்காவலர்கள் உஷாரவி, மோகனன், சுரேஷ்பாபு, நாகன் ஆகியோர் முன்னிலையில் கூட்டம் நடந்தது.
இதில் கோவில் அதிகாரிகள், தலைமை குருக்கள் மற்றும் அர்ச்சகர்கள் பங்கேற்று ஆடிக்கிருத்திகை விழாவில் மேற்கொள்ள வேண்டிய பணி குறித்து பேசினர்.