ADDED : ஜூன் 11, 2024 05:09 AM

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி பகுதியை சேர்ந்த எட்டு பேர் நேற்று முன்தினம் சென்னை, சைதாப்பேட்டையில் நடந்த திருமண நிகழ்வில் கேட்ரிங் வேலை பார்க்க சென்றனர்.
நள்ளிரவில், எட்டு பேரும் சரக்கு ஆட்டோவில் வீடு திரும்பினர். கும்மிடிப்பூண்டி புறவழிச்சாலையில், அவர்கள் இறங்கும் போது, பின்னால் வந்த லாரி ஒன்று சரக்கு ஆட்டோ மீது மோதியது. இந்த விபத்தில், ஓபசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த சாரதி, 20 அதே இடத்தில் உயிரிழந்தார்.
ஆரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த சலீம், 32, அப்துல் கபூர், 48, சுண்ணாம்புகுளம் கிராமத்தை சேர்ந்த சந்தோஷ், 18, ஆகியோர் படுகாயங்களுடன் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் விசாரித்து வருகின்றனர்.