Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ புற்றீசல் போல் பெருகும் உணவகங்கள் கண்காணிப்பு இல்லாததால் அதிருப்தி

புற்றீசல் போல் பெருகும் உணவகங்கள் கண்காணிப்பு இல்லாததால் அதிருப்தி

புற்றீசல் போல் பெருகும் உணவகங்கள் கண்காணிப்பு இல்லாததால் அதிருப்தி

புற்றீசல் போல் பெருகும் உணவகங்கள் கண்காணிப்பு இல்லாததால் அதிருப்தி

ADDED : ஜூன் 04, 2024 05:24 AM


Google News
பொன்னேரி : பொன்னேரி, மீஞ்சூர் பகுதிகளில் ஏராளமான துரித உணவகங்கள் புற்றீசல் போல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. கட்டடங்களில் மட்டும் இன்றி, தற்போது சாலையோரங்களில் தள்ளுவண்டி மற்றும் நான்கு சக்கர வாகனங்களிலும் அதிகளவில் செயல்படுகின்றன.

கிராமங்களிலும் இவற்றின் ஆதிக்கம் துவங்கி உள்ளது. இங்கு இளைஞர்களின் வருகையே அதிகளவில் உள்ளன. வெஜ் பிரைடு ரைஸ், சிக்கன் பிரைடு ரைஸ், கொத்து பரோட்டா, கொத்து கறி, சிக்கன் கிரேவி என கேட்டு, இளைஞர்கள் துரித உணவகங்களில் காத்திருக்கின்றனர்.

துரித உணவுகள் சூடாகவும், சுவையாகவும் இருப்பதால், இவற்றிற்கு மவுசு அதிகமாக இருக்கிறது.

அதே சமயம் இந்த வகை உணவுகள் எந்த அளவிற்கு சுகாதாரம் மற்றும் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது என்பது கேள்விக்குறியாக உள்ளது.

துரித உணவகங்களில் பயன்படுத்தப்படும் உணவு பொருட்கள் குறித்து, சுகாதார துறையினர் எந்த ஆய்வுகளும் மேற்கொள்வதில்லை. இதனால், அவற்றை விரும்பி சாப்பிடுபவர்களின் உடல் ஆரோக்கியம் பாதிக்கும் என்பதை எண்ணி சமூக ஆர்வலர்கள், உணவு பாதுகாப்பு துறையினர் மீது அதிருப்தியில் உள்ளனர்.

இது குறித்து பொன்னேரியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஷகில் முகமது கூறியதாவது:

சிக்கனுடன், மாவு பொருட்களில் தயாரிக்கும் செயற்கை சிக்கனை கலக்கின்றனர்.

இது எந்தளவிற்கு ஆரோக்கியமானதாக இருக்கும் என்பது கேள்விக்குறியே.

உணவுப்பொருட்களை தயாரிக்கும்போது வாச னை மற்றும் பார்ப்பவர்களை கவரும் வகையிலான வர்ணம் இருப்பதற்காக, சில ரசாயன பொருட்களை பயன்படுத்துகின்றனர்.

சாப்பிடும் போது இவை சுவையாக இருக்கும். ஆனால், இதன் பாதிப்புகள் வயது மூப்பின்போது தான் தெரியவரும்.

துரித உணவகங்களை உணவு பாதுகாப்பு துறையினர் அவ்வப்போது கண்காணிக்க வேண்டும். தரமற்ற உணவு பொருட்களை பயன்படுத்துபவர்கள் து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us