/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ விவசாய கிணற்றில் விழுந்த பசு மாடு உயிருடன் மீட்பு விவசாய கிணற்றில் விழுந்த பசு மாடு உயிருடன் மீட்பு
விவசாய கிணற்றில் விழுந்த பசு மாடு உயிருடன் மீட்பு
விவசாய கிணற்றில் விழுந்த பசு மாடு உயிருடன் மீட்பு
விவசாய கிணற்றில் விழுந்த பசு மாடு உயிருடன் மீட்பு
ADDED : ஜூன் 03, 2024 04:49 AM

திருத்தணி: திருத்தணி ஒன்றியம் தெக்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன், 40. இவர், நேற்று காலை தனக்கு சொந்தமான பசு மாட்டை மேய்ச்சலுக்காக வயல்வெளிக்கு ஓட்டிச் சென்றார்.
அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த கஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான, 50 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றுக்குள் பசு மாடு திடீரென தவறி விழுந்தது.
இதையடுத்து, கிருஷ்ணன் திருத்தணி தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தார். விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், கிணற்றில் உயிருக்கு போராடி கொண்டிருந்த பசு மாட்டை, மக்களின் உதவியுடன் கயிறு கட்டி உயிருடன் மீட்டனர்.