/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ அம்பத்துாரில் 12 மாடி 'ஐ.டி., டவர்' 'பூர்விகா குவாலிட்டி' குழுமம் திட்டம் அம்பத்துாரில் 12 மாடி 'ஐ.டி., டவர்' 'பூர்விகா குவாலிட்டி' குழுமம் திட்டம்
அம்பத்துாரில் 12 மாடி 'ஐ.டி., டவர்' 'பூர்விகா குவாலிட்டி' குழுமம் திட்டம்
அம்பத்துாரில் 12 மாடி 'ஐ.டி., டவர்' 'பூர்விகா குவாலிட்டி' குழுமம் திட்டம்
அம்பத்துாரில் 12 மாடி 'ஐ.டி., டவர்' 'பூர்விகா குவாலிட்டி' குழுமம் திட்டம்
ADDED : ஜூலை 08, 2024 06:23 AM

சென்னை: அம்பத்துாரில், 12 தளங்களுடன் 5 லட்சம் சதுர அடியில், தகவல் தொழில்நுட்ப 'டவர்' மற்றும் அலுவலக வளாகம் கட்டப்பட உள்ளது.
சென்னையில் பழைய மாமல்லபுரம் சாலை, ஜி.எஸ்.டி., சாலை, அண்ணா சாலை போன்ற இடங்களில், தகவல் தொழில்நுட்ப நிறுவன பயன்பாட்டிற்கான புதிய வளாகங்கள் கட்டப்படுகின்றன.
இதனால், சிறிய மற்றும் நடுத்தர நிலையிலுள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு, அலுவலக தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.
தகவல் தொழில்நுட்பம் மட்டுமின்றி நிதி, வர்த்தகம் சார்ந்த பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களுக்கும், அலுவலகங்கள் தேவைப்படுகின்றன.
இதை பூர்த்தி செய்யும் வகையில் பல்வேறு பெரிய கட்டுமான நிறுவனங்கள், அடுக்குமாடி அலுவலக வளாகங்களை கட்டி வருகின்றன.
சென்னை மற்றும் புறநகரில், இதுபோன்ற அலுவலக வளாகங்களுக்கான சந்தை வளர்ந்து வருகிறது. இதனால், அரசு சார்ந்த நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களும், புதிய அலுவலக வளாகங்கள் கட்டுவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றன.
இதனால், அதிக தளங்களைக் கொண்ட புதிய அலுவலக வளாகங்கள், பரவலாக வரத்துவங்கி உள்ளன. இந்த வகையில், அம்பத்துாரில் பல்வேறு நிறுவனங்கள், புதிய அலுவலக வளாகங்களைக் கட்ட ஆரம்பித்து உள்ளன.
இதில் குறிப்பாக, பூர்விகா குவாலிட்டி குழுமம் என்ற நிறுவனம் சார்பில் அம்பத்துார், மூன்றாவது பிரதான சாலையில், புதிய அடுக்குமாடி அலுவலக வளாகம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
அம்பத்துாரில், சென்னை புறவழிச் சாலையை ஒட்டி, பி.எஸ்.என்.எல்., தொலைபேசி இணைப்பகம் எதிரில், இதற்கான நிலம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
இங்கு, 12 மாடிகள் கொண்ட, 5 லட்சம் பரப்பளவுள்ள தகவல் தொழில்நுட்ப 'டவர்' கட்டப்பட உள்ளது.
ஏற்கனவே நிலம் தேர்வு செய்யப்பட்ட நிலையில், புதிய கட்டடத்திற்கான வடிவமைப்பு இறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பல்வேறு வங்கிகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் அலுவலகங்கள் அமைந்துள்ள பகுதியில் இந்த வளாகம் கட்டப்படுவது, இப்பகுதியில் புதிய முன்னேற்றமாக அமைந்துள்ளதாக, ரியல் எஸ்டேட் சொத்து மதிப்பீட்டாளர்கள் தெரிவித்து உள்ளனர்.