/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ 12 சவரன் நகை ரூ. 50 ஆயிரம் திருட்டு 12 சவரன் நகை ரூ. 50 ஆயிரம் திருட்டு
12 சவரன் நகை ரூ. 50 ஆயிரம் திருட்டு
12 சவரன் நகை ரூ. 50 ஆயிரம் திருட்டு
12 சவரன் நகை ரூ. 50 ஆயிரம் திருட்டு
ADDED : ஜூலை 26, 2024 11:08 PM
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் அருகே நெல்லிமரத்துகண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் மனைவி அமுதா, 28. நேற்று முன்தினம் மாலை, வீட்டை பூட்டிக்கொண்டு அருகில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார்.
இரண்டு மணி நேரம் கழித்து வீடு திரும்பினார். இடைப்பட்ட நேரத்தில், வீட்டின் முகப்பில் அவர் மறைத்து வைத்திருந்த சாவியை எடுத்து மர்ம நபர்கள் உள்ளே சென்றனர். பீரோவில் வைத்திருந்த, 12 சவரன் நகை, 50 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை திருடி சென்றனர்.
புகாரிபடி பாதிரிவேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.