/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ பர்மா பஜாரில் 100 கடைகளுக்கு 'சீல்' பர்மா பஜாரில் 100 கடைகளுக்கு 'சீல்'
பர்மா பஜாரில் 100 கடைகளுக்கு 'சீல்'
பர்மா பஜாரில் 100 கடைகளுக்கு 'சீல்'
பர்மா பஜாரில் 100 கடைகளுக்கு 'சீல்'
ADDED : ஜூலை 21, 2024 07:04 AM

பிராட்வே: சென்னையில், 1967ல் பர்மாவில் - தற்போதைய மியான்மரில் இருந்து வந்தவர்களின் வாழ்வாதாரத்திற்காக, பர்மா பஜார் கடைகளை தமிழக
அரசு கட்டிக் கொடுத்தது. 20 சதுர அடி பரப்பளவில் கடைகள் கட்டப்பட்டு, வாடகை அடிப்படையில் ஒதுக்கப்பட்டன.
பிராட்வே, ராஜா அண்ணாமலை மன்றத்திற்கு எதிரே, 256 பர்மா பஜார் கடைகள் உள்ளன. இக்கடை ஒன்றிற்கு, மாதம் 509 ரூபாய் மாநகராட்சி சார்பில் வாடகையாக வசூலிக்கப்படுகிறது.
இதில், மூன்று மாதங்கள் முதல் ஓராண்டிற்கு மேலாக, 100 கடைகள் வாடகை செலுத்தாமல் இருந்தன. மொத்தம், 6.50 லட்சம் ரூபாய் வரி பாக்கி இருந்தது. பலமுறை மாநகராட்சி 'நோட்டீஸ்' அனுப்பியும் கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து, ராயபுரம் வருவாய் அதிகாரிகள் தலைமையில் 10 பேர் குழு, பர்மா பஜாரில் உள்ள 100 கடைகளுக்கு நேற்று 'சீல்' வைத்தனர்.