/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/மின்சாரம் தாக்கி முருக பக்தர்கள் இருவர் பலிமின்சாரம் தாக்கி முருக பக்தர்கள் இருவர் பலி
மின்சாரம் தாக்கி முருக பக்தர்கள் இருவர் பலி
மின்சாரம் தாக்கி முருக பக்தர்கள் இருவர் பலி
மின்சாரம் தாக்கி முருக பக்தர்கள் இருவர் பலி
ADDED : ஜன 13, 2024 01:28 AM
திருநெல்வேலி:திருநெல்வேலி அருகே முருக பக்தர்கள் இருவர் வெவ்வேறு சம்பவங்களில் மின்சாரம் தாக்கி பலியாயினர்.
திருநெல்வேலி அடுத்துள்ள முன்னீர்பள்ளம், தருவையை சேர்ந்தவர் பால்ராஜ் 47. கட்டட தொழிலாளி. திருமணமாகி மனைவி, குழந்தைகள் உள்ளனர். இவர் உட்பட 15 பேர் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு பாதயாத்திரை செல்ல விரதம் இருந்தனர். நேற்று முன்தினம் இரவில் அங்குள்ள கோயிலில் வைத்து பஜனை பாடல்கள் பாடிக்கொண்டிருந்தனர். அப்போது மைக் வழியே மின்சாரம் பாய்ந்ததில் பால்ராஜ் மற்றும் கணேசன், சிவபாலன் ஆகியோர் தூக்கி வீசப்பட்டனர். இதில் பால்ராஜ் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார். முன்னீர் பள்ளம் போலீசார் விசாரித்தனர்.
மற்றொரு சம்பவம்
திருநெல்வேலி தாழையூத்தை சேர்ந்தவர் கார்த்திக் 30. தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மருதம்புத்தூரில் மனைவி குழந்தையுடன் வசித்து வந்தார். திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு செல்ல விரதம் இருந்தார். நேற்று திருச்செந்தூர் செல்ல தயாராகிக் கொண்டிருந்தனர். பாதயாத்திரையுடன் கொண்டு செல்லப்படும் வேனை மின்சார விளக்குகள் கொண்டு அலங்கரித்தனர் .அப்போது மின்சாரம் தாக்கியதில் கார்த்திக் இறந்தார். போலீசார் விசாரித்தனர்.