ADDED : மே 25, 2025 02:49 AM

திருநெல்வேலி:திருநெல்வேலிமாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே நாஞ்சார்குளத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் ராம்சுந்தர் 25.
இவர் 22 வயதான இளம்பெண்ணை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தார்.
திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி தனிமையில் நெருங்கிப்பழகினார். அதன் பின்னர் அந்த பெண்ணிடம் பேசவில்லை. அவர் கேட்டபோது திருமணம் செய்து கொள்ள மறுத்தார். ராம்சுந்தரை, நாங்குநேரி அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.