/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/ ரூ.17 கோடி நெல் கொள்முதல் பாக்கி மத்திய அரசு மீது விவசாயிகள் கடுப்பு ரூ.17 கோடி நெல் கொள்முதல் பாக்கி மத்திய அரசு மீது விவசாயிகள் கடுப்பு
ரூ.17 கோடி நெல் கொள்முதல் பாக்கி மத்திய அரசு மீது விவசாயிகள் கடுப்பு
ரூ.17 கோடி நெல் கொள்முதல் பாக்கி மத்திய அரசு மீது விவசாயிகள் கடுப்பு
ரூ.17 கோடி நெல் கொள்முதல் பாக்கி மத்திய அரசு மீது விவசாயிகள் கடுப்பு
ADDED : மே 24, 2025 07:40 PM

திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டத்தில், நெல் கொள்முதல் செய்த மத்திய அரசின் நிறுவனம், 17 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளதால், விவசாயிகள் ஆவேசமடைந்தனர்.
திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று முன்தினம் கலெக்டர் சுகுமார் தலைமையில் நடந்தது. விவசாயிகள் சங்க தலைவர் பெரும்படையார் பேசியதாவது:
திருநெல்வேலி மாவட்டத்தில், கடந்த மார்ச், பிசான நெல் சாகுபடியின் போது, மாநில அரசின் சிவில் சப்ளைஸ் 44 மையங்களிலும் மத்திய அரசின் கூட்டுறவு நிறுவனம், 16 மையங்களிலும் நெல் கொள்முதல் செய்தன.
மாநில அரசு, விவசாயிகளுக்கான தொகையை வழங்கிவிட்டது. ஆனால், 16 மையங்களில் மத்திய அரசு நிறுவனம் கொள்முதல் செய்த மொத்த தொகை, 17.80 கோடி ரூபாய் இன்னும் வழங்கப்படாமல் உள்ளது.
விவசாயிகளுக்கு சிக்கல்
விவசாயிகள் கடன் வாங்கி மேற்கொண்ட நெல் உற்பத்திக்கு தொகை தராமல் மாதக்கணக்கில் மத்திய அரசு இழுத்தடித்து வருகிறது.
ஒரு விவசாயிக்கு, 5 லட்சம் ரூபாய் வரை பாக்கி இருந்தால், அவர் எப்படி தொடர்ந்து விவசாயம் செய்ய முடியும்.
விரைந்து மத்திய அரசு தமிழக முழுதும் வழங்க வேண்டிய பாக்கி தொகையை தர வேண்டும். அண்மையில் ரிசர்வ் வங்கி, தங்க நகை கடன் பெறுவதில் பல்வேறு விதிமுறை வகுத்திருப்பதும் விவசாயிகளுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
விவசாயி பாலையா பேசியதாவது:
இரண்டு ஆண்டுகளாக மத்திய அரசு நிறுவனம் விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்கிறது. கடந்த ஆண்டும் இதே போல தொகையை தருவதில் தாமதப்படுத்தினர்.
கலெக்டரிடம் கோரிக்கை
இந்த ஆண்டு மத்திய அரசின் நிறுவனத்தை கொள்முதல் மையங்களாக அமைக்க வேண்டாம் என, கலெக்டரிடம் கோரிக்கை வைத்தோம். இருப்பினும், மத்திய அரசுக்கும் ஒரு வாய்ப்பு தர வேண்டும் என அதிகாரிகள் 16 மையங்களில் கொள்முதல் மேற்கொண்டனர்.
இரண்டு மாதங்கள் ஆகியும் விவசாயிகளுக்கு நிலுவை தொகை தரப்படவில்லை. இந்நிலை தொடர்ந்தால், விவசாயிகளை திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.