ADDED : ஜன 05, 2024 12:02 AM
திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் மணப்படை வீடு கிராமத்தைச் சேர்ந்தவர் சுருளி ராஜன், 54, அரசு ஒப்பந்ததாரர். தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை சேர்ந்தவர். இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த அதே சமூகத்தினருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது.
இந்நிலையில், டிச., 6ல் மாவட்ட கோர்ட் அருகே கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் கைதான மணப்படைவீட்டை சேர்ந்த அசோக்குமார், 37, உட்பட ஐந்து பேர் மீது மாநகர போலீசார் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுத்து, சிறையில் அடைத்தனர்.