/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/ ரூ.1 கோடி செப்பு ஒயர் திருடிய கும்பல் சிக்கியது ரூ.1 கோடி செப்பு ஒயர் திருடிய கும்பல் சிக்கியது
ரூ.1 கோடி செப்பு ஒயர் திருடிய கும்பல் சிக்கியது
ரூ.1 கோடி செப்பு ஒயர் திருடிய கும்பல் சிக்கியது
ரூ.1 கோடி செப்பு ஒயர் திருடிய கும்பல் சிக்கியது
ADDED : ஜூலை 05, 2025 02:36 AM

பழவூர்:காற்றாலை, மின் பம்பு செட்டுகளில் உள்ள செப்பு ஒயர்களை திருடிய கும்பலில் ஒருவரை, பாதிக்கப்பட்டவர்களே பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் பல இடங்களில் உள்ள காற்றாலைகளில் இருந்து ஆறு மாதங்களில், 1 கோடி ரூபாய் மதிப்பிலான செப்பு மின் ஒயர்கள் திருடு போயுள்ளதாக பழவூர் போலீஸ் ஸ்டேஷனில் காற்றாலை உரிமையாளர்கள் புகார் செய்தனர். மேலும், கிராம மக்கள் கமிட்டி அமைத்து, திருடர்களை பிடிக்கவும் முயற்சித்தனர்.
நேற்று முன்தினம் இரவு ஐந்து பேர் கும்பல், ஆவரைகுளம் பகுதியில் உள்ள விவசாய தோட்டத்தில் செப்பு மின் ஒயர்களை வெட்டி எடுத்துச் செல்ல முயன்றது. அப்போது, கிராம கமிட்டியினர் அவர்களை பிடிக்க முயன்றனர். திருடர்கள் தப்பி ஓடினர். ஒருவர் மட்டும் பிடிபட்டார்.
அவரை, பழவூர் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர், சங்கனாபுரத்தை சேர்ந்த மாசாணம், 45, எனவும், உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு செப்பு ஒயர்களை திருடியதும் தெரியவந்தது. தப்பி ஓடியவர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.