/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/ தி.மு.க., நிர்வாகி கொலையில் நான்கு பேருக்கு ஆயுள் தி.மு.க., நிர்வாகி கொலையில் நான்கு பேருக்கு ஆயுள்
தி.மு.க., நிர்வாகி கொலையில் நான்கு பேருக்கு ஆயுள்
தி.மு.க., நிர்வாகி கொலையில் நான்கு பேருக்கு ஆயுள்
தி.மு.க., நிர்வாகி கொலையில் நான்கு பேருக்கு ஆயுள்
ADDED : மார் 27, 2025 03:13 AM
திருநெல்வேலி,:திருநெல்வேலி அருகே வீரவநல்லுாரில் தி.மு.க., நகர செயலாளர் 2011 ல் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லுார் பகுதியில் 2000ம் ஆண்டுகளில் இரு தரப்பினர் இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டு அடுத்தடுத்து கொலை சம்பவங்கள் நடந்தன.
வீரவநல்லுாரில் தி.மு.க., நகரச் செயலாளராக இருந்த ரத்னவேல் பாண்டியன் என்பவர் 2011 ஜூன் 21ல் ஒரு கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.இந்த வழக்கு திருநெல்வேலி கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் நடந்தது. 21 பேர் கைது செய்யப்பட்டனர். விசாரணையின் போது நான்கு பேர் இயற்கை மரணம் அடைந்தனர்.
இவ்வழக்கில் வீரவநல்லுாரை சேர்ந்த சுப்பையா தாஸ் 38, சுரேஷ் பொன்னையா 37, சுரேஷ் அருணாச்சலம் 37, கொம்பையா 38, ஆகிய நான்கு பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்தும் மற்றவர்களை விடுதலை செய்தும் நீதிபதி பத்மநாபன் தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் கருணாநிதி ஆஜரானார்.