/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/ கல்லிடைக்குறிச்சியில் நிற்காமல் சென்ற ரயில் கல்லிடைக்குறிச்சியில் நிற்காமல் சென்ற ரயில்
கல்லிடைக்குறிச்சியில் நிற்காமல் சென்ற ரயில்
கல்லிடைக்குறிச்சியில் நிற்காமல் சென்ற ரயில்
கல்லிடைக்குறிச்சியில் நிற்காமல் சென்ற ரயில்
ADDED : ஜூலை 08, 2024 11:42 PM
திருநெல்வேலி : திருநெல்வேலியில் இருந்து மேட்டுப்பாளையம் சென்ற சிறப்பு ரயில் கல்லிடைக்குறிச்சி ஸ்டேஷனில் நிற்காமல் சென்றதால் டிரைவர், உதவி டிரைவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
திருநெல்வேலியிலிருந்து மேட்டுப்பாளையத்திற்கு வாரந்தோறும் ஞாயிறு இரவு சிறப்பு ரயில் 06030 இயக்கப்படுகிறது. திருநெல்வேலியில் இருந்து சேரன்மகாதேவி, கல்லிடைகுறிச்சி, அம்பாசமுத்திரம், தென்காசி வழியாக மேட்டுப்பாளையம் செல்லும். நேற்று முன்தினம் கிளம்பிய ரயில் கல்லிடைக்குறிச்சியில் இரவு 7:40 மணிக்கு நிற்காமல் சென்றது. கல்லிடைக்குறிச்சியில் இறங்க வேண்டிய 50க்கும் மேற்பட்ட பயணிகள் அம்பாசமுத்திரம் ரயில் நிலையத்தில் இறங்கினர். கல்லிடைக்குறிச்சியில் இருந்து பழனி, கோயம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு டிக்கெட் எடுத்த சுமார் 50 பயணிகள் ரயில் நிலையத்தில் ரயில் நிற்காததால் தவித்தனர்.
கல்லிடைக்குறிச்சி ரயில் பயணிகள் சங்க நிர்வாகிகள் ரயில்வே அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தனர். கல்லிடைக்குறிச்சி ரயிலை தவற விட்டு காத்திருந்த பயணிகள், ஈரோட்டில் இருந்து திருநெல்வேலி, கல்லிடைகுறிச்சி வழியாக செங்கோட்டை செல்லும் ரயிலில் ஏறிச் சென்று தென்காசியில் இறங்கினர். மேட்டுப்பாளையம் ரயில் தென்காசி ரயில்வே ஸ்டேஷனில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நிறுத்தப்பட்டிருந்தது.
ஈரோடு ரயில் தென்காசி சென்று சேர்ந்ததும் பயணிகள் மேட்டுப்பாளையம் ரயிலில் ஏறி பயணித்தனர். இரவு 9:40க்கு தென்காசியிலிருந்து கிளம்ப வேண்டிய மேட்டுப்பாளையம் ரயில் தாமதமாக இரவு 10:40க்கு கிளம்பியது.
இது குறித்து நடவடிக்கை எடுத்த மதுரை கோட்ட ரயில்வே அதிகாரிகள், கல்லிடைக்குறிச்சி ஸ்டேஷனில் நிற்காமல் சென்ற ரயில் டிரைவர் ஏ.எஸ்.விஷ்ணு, உதவி டிரைவர் சண்முக வேலாயுதம் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டனர்.
ஜூன் 3ல் திருச்செந்தூரில் இருந்து பாலக்காடு சென்ற 16732 ரயில் நாசரேத் அருகே கச்சினாவிளை ஸ்டேஷனில் நிற்காமல் சென்றதால் டிரைவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.