/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/ தி.மு.க., மேயரை கண்டித்து கூட்டத்தை அக்கட்சி கவுன்சிலர்களே புறக்கணித்தனர் தி.மு.க., மேயரை கண்டித்து கூட்டத்தை அக்கட்சி கவுன்சிலர்களே புறக்கணித்தனர்
தி.மு.க., மேயரை கண்டித்து கூட்டத்தை அக்கட்சி கவுன்சிலர்களே புறக்கணித்தனர்
தி.மு.க., மேயரை கண்டித்து கூட்டத்தை அக்கட்சி கவுன்சிலர்களே புறக்கணித்தனர்
தி.மு.க., மேயரை கண்டித்து கூட்டத்தை அக்கட்சி கவுன்சிலர்களே புறக்கணித்தனர்
ADDED : ஜூன் 29, 2024 02:08 AM

திருநெல்வேலி:திருநெல்வேலி மாநகராட்சியில் 60க்கும் மேற்பட்ட தீர்மானங்களை தி.மு.க., மேயர் சரவணன் கொண்டு வராததை கண்டித்து தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சியினரே கூட்டத்தை புறக்கணித்தனர்.
இம்மாநகராட்சியில் மேயராக தி.மு.க.,வைச் சேர்ந்த சரவணன் உள்ளார். துணை மேயராக ராஜு உள்ளார்.
மேயர் தன்னிடம் பேச்சுவார்த்தைக்கு வரும் ஒப்பந்ததாரர்களின் பணிகளுக்கு மட்டுமே அனுமதி அளிப்பதாகவும் லாபம், கமிஷன் வராத டெண்டர்களுக்கு அவர் அனுமதி மறுப்பதாகவும் அவருக்கு எதிராக தி.மு.க., கவுன்சிலர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தனர். இரு முறை கூட்டங்களையும் தி.மு.க., கவுன்சிலர்கள் புறக்கணித்தனர்.
இந்நிலையில் மூன்று மாதங்களுக்கு பிறகு நேற்று திருநெல்வேலியில் மாநகராட்சி கூட்டம் கமிஷனர் தாக்கரே முன்னிலையில் நடந்தது.
55 கவுன்சிலர்களில் மூன்று தி.மு.க., கவுன்சிலர்கள் உட்பட 10 கவுன்சிலர்கள் மட்டுமே வந்திருந்தனர். மாலை 4:30 மணிக்கு கூட்டம் துவங்கியது.
மாலை 5:30 மணி வரையிலும் மேயர், துணை மேயர், கமிஷனர் காத்திருந்தனர். பெரும்பான்மை கவுன்சிலர்கள் கூட்டத்திற்கு வராமல் புறக்கணித்தனர்.
கவுன்சிலர்கள் கூட்டாக வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது:
பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளான வடிகால், குடிநீர், பள்ளி கட்டடங்கள் பராமரிப்பு போன்ற 60 பணிகளுக்கு டெண்டர்கள் விடப்பட்டும் அதற்கான ஒப்புதலை மேயர் சுயநலனுக்காக நிறுத்தியுள்ளார். அதை கண்டித்து கூட்டத்தை புறக்கணிக்கிறோம் என கூறியுள்ளனர். மாலை 5:30 மணி வரை காத்திருந்த கமிஷனர், மேயர் கூட்டத்தை நடத்த போதிய கவுன்சிலர்கள் வராததால் தீர்மானங்கள் எதையும் நிறைவேற்றாமல் அங்கிருந்து சென்றனர்.
மாநகராட்சியில் எந்த பணிகளும் நடக்க விடாமல் தி.மு.க.,வைச் சேர்ந்த மேயர் மற்றும் கவுன்சிலர்கள் செயல்படுவதாக அ.தி.மு.க., கவுன்சிலர்கள் குற்றம் சாட்டினர்.