ADDED : ஜூலை 02, 2024 05:16 AM
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே பள்ளி மாணவர்களிடையே ஜாதி ரீதியாக நடந்த மோதலில் இருவர் காயமுற்றனர்.
நாங்குநேரி தாலுகா மூன்றடைப்பு அருகே மருதகுளத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. நேற்று மதியம் இடைவேளையின்போது பிளஸ் 2 பயிலும் மாணவர்கள் இரு தரப்பாக ஜாதி ரீதியாக மோதிக்கொண்டனர். இதில் இருவருக்கு காயம் ஏற்பட்டது. காயமுற்றவர்கள் திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மூன்றடைப்பு போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். கல்வித்துறை அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டனர்.
நாங்குநேரியில் பள்ளி மாணவர்களுடையே ஏற்பட்ட ஜாதி மோதல் முடிவுக்கு வந்து அமைதி ஏற்பட்டுள்ளது. தற்போது மீண்டும் மருதகுளத்தில் ஜாதி மோதல் ஏற்பட்டுள்ளதால் போலீசார், கல்வித்துறையினர் மாணவர்களிடையே சுமூகமான நிலை ஏற்படுத்த முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்