/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/ இடைவிடாத முயற்சி, கடின உழைப்பு 7வது முறையில் நீட் தேர்வில் சாதித்த மாணவர் இடைவிடாத முயற்சி, கடின உழைப்பு 7வது முறையில் நீட் தேர்வில் சாதித்த மாணவர்
இடைவிடாத முயற்சி, கடின உழைப்பு 7வது முறையில் நீட் தேர்வில் சாதித்த மாணவர்
இடைவிடாத முயற்சி, கடின உழைப்பு 7வது முறையில் நீட் தேர்வில் சாதித்த மாணவர்
இடைவிடாத முயற்சி, கடின உழைப்பு 7வது முறையில் நீட் தேர்வில் சாதித்த மாணவர்
ADDED : ஜூன் 06, 2024 01:08 AM
திருநெல்வேலி:இடைவிடாத முயற்சி, கடின உழைப்புக்கு உதாரணமாக திகழ்ந்து 7வது முறையில் நீட் தேர்வில் பாளை மாணவர் சாதித்து காட்டியுள்ளார்.
மேலப்பாளையம் அத்தியடி கீழத் தெருவை சேர்ந்தவர் அப்துல் ரகுமான். கூலித் தொழிலாளி. இவருடைய மனைவி செய்த அலி பாத்து. இவர்களின் 2வது மகன் முகமது பைசல் கடந்த 2018ம் -ஆண்டு மேலப்பாளையம் கோல்டன் ஜூப்ளி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 முடித்துள்ளார். அந்த ஆண்டு நடந்த நீட் தேர்வில் பங்கேற்ற இவர் 71 மார்க் எடுத்துள்ளார். தொடர்ந்து அடுத்த ஆண்டு 2வது முறையாக நீட் எழுதி அதில் 325 மார்க் பெற்றார். போதிய மார்க் கிடைக்காததால் அடுத்த ஆண்டு 3வது முறையாகவும் நீட் தேர்வு எழுதி அதில் 460 மார்க்தான் எடுக்க முடிந்தது.
தனது முயற்சியில் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல் மாணவர் முகமது பைசல் 4வது முறையாக நீட் தேர்வு எழுதி 514 மார்க் பெற்றுள்ளார். இந்த மதிப்பெண்ணும் கை கொடுக்காததால் 5வது முறையாக எழுதிய நீட் தேர்வில் 479 மார்க் பெற்றார். மீண்டும் 6வது முறையாக நீட் தேர்வு எழுதியவர் 539 மார்க் எடுத்தார்.
டாக்டராகும் கனவை இழக்க விரும்பாத முகம்மது பைசல் மனமுடையாமல் மீண்டும் தன்னுடைய பெற்றோர்கள் அளித்த உற்சாகத்தில் இந்த ஆண்டு 7வது முறையாக நீட் தேர்வு எழுதினார். அதில் 720க்கு 603 மார்க் பெற்று டாக்டராகும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
இதுகுறித்து முகம்மது பைசல் கூறும் போது, ''சிறு வயது முதலே டாக்டராக வேண்டும் என்பதுதான் எனது லட்சியம், ஆசை, கனவு எல்லாம். அதனால்தான் வேறு எந்த பாட பிரிவுகளையும் தேர்வு செய்யாமல் நீட் தேர்வுக்காகவே தொடர்ந்து படித்து தற்போது நல்ல மார்க் பெற்று நம்பிக்கையுடன் நெல்லை மருத்துவ கல்லுாரியில் சீட்டை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்'' என்றார்.
இடைவிடாத முயற்சி, கடின உழைப்பு, லட்சிய வேட்கைக்கு மாணவர் முகம்மது பைசல் உதாரணம் என்றால் மிகையில்லை.
இந்த மாணவனை பள்ளி முதல்வர் ஜெசிந்தா மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாராட்டினர். இதுபோல் இந்த பள்ளியில் படித்த மாணவர் சபீர் உர்பானி 621, மாணவர் செய்யது ஹீசேன் என்ற மாணவர் 597 மார்க் பெற்று டாக்டர்களாக காத்திருக்கின்றனர்.