/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/ பா.ஜ., தலைவர்கள் குறித்து அவதூறு ஹிந்து மக்கள் கட்சி நிர்வாகி கைது பா.ஜ., தலைவர்கள் குறித்து அவதூறு ஹிந்து மக்கள் கட்சி நிர்வாகி கைது
பா.ஜ., தலைவர்கள் குறித்து அவதூறு ஹிந்து மக்கள் கட்சி நிர்வாகி கைது
பா.ஜ., தலைவர்கள் குறித்து அவதூறு ஹிந்து மக்கள் கட்சி நிர்வாகி கைது
பா.ஜ., தலைவர்கள் குறித்து அவதூறு ஹிந்து மக்கள் கட்சி நிர்வாகி கைது
ADDED : ஜூன் 12, 2024 02:49 AM

திருநெல்வேலி:திருநெல்வேலியில் பா.ஜ., தோல்வியுற்றது குறித்து அவதூறாக பேசி ஆடியோ வெளியிட்ட ஹிந்து மக்கள் கட்சி மாநில துணைச் செயலாளர் உடையார் கைது செய்யப்பட்டார்.
திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ. வேட்பாளர் நயினார் நாகேந்திரன் தோல்வியுற்றார். அம்மாவட்ட ஹிந்து முன்னணி மாவட்ட செயலாளராக இருந்தவரும் தற்போது அர்ஜுன் சம்பத் தலைமையிலான ஹிந்து மக்கள் கட்சி மாநில துணை செயலாளருமான உடையார், மாவட்ட பா.ஜ., தலைவர் தமிழ்ச்செல்வனிடம் போனில் பேசும் ஆடியோவை வெளியிட்டிருந்தார்.
அதில் பா.ஜ., பணப்பட்டுவாடா சரியாக மேற்கொள்ளவில்லை எனவும் தோல்விக்கு சிலர் காரணம் என பா.ஜ., தலைவர்களை குறிப்பிட்டு பேசியிருந்தார்.
அவரது பேச்சு பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக திருநெல்வேலி நகர் எஸ்.ஐ., துரைப்பாண்டி புகார் செய்தார்.
இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கட்சியிலிருந்து நீக்கம்
கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் அறிக்கை:
இந்து மக்கள் கட்சி மாநில துணைத் தலைவரும், முன்னாள் மாவட்டத் தலைவருமான உடையார், கட்சி கொள்கைகளுக்கு விரோதமாக, 'கலவரம் செய்தால்தான் பா.ஜ., வளரும்' என, தொலைபேசி உரையாடலில் பேசியது, வன்மையாக கண்டிக்கத்தக்கது.
பா.ஜ., மாவட்டத் தலைவரோடு தான் நடத்திய உரையாடலைப் பதிவு செய்து, பொது வெளியில் வெளியிட்டு, ஹிந்து இயக்கங்களின் ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் வகையில் செயல்பட்டுள்ளார்.
எனவே, இந்து மக்கள் கட்சியில் இருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும், தற்காலிகமாக நீக்கப்படுகிறார். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.