ADDED : ஜூன் 13, 2024 02:49 AM
திருநெல்வேலி:கடன் பிரச்னையில் கணவன், மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
திருநெல்வேலி மாவட்டம் மானுார் அருகே கீழப்பிள்ளையார்குளத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் 58. ஓட்டல் தொழிலாளி. மனைவி ஜெயக்குமாரி அரசு மாணவர் விடுதியில் சமையலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இவர்கள் புதிதாக வீடு கட்டினர். இதற்கு அக்கம் பக்கத்தில் கடன் வாங்கினர். கடனை திரும்ப செலுத்த முடியவில்லை. இதனால் மனமுடைந்தவர்கள் நேற்று காலை பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டனர். மானுார் போலீசார் விசாரித்தனர்.