/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/ கிராபைட் சுரங்க திட்டம்; மத்திய அரசு ரத்து கிராபைட் சுரங்க திட்டம்; மத்திய அரசு ரத்து
கிராபைட் சுரங்க திட்டம்; மத்திய அரசு ரத்து
கிராபைட் சுரங்க திட்டம்; மத்திய அரசு ரத்து
கிராபைட் சுரங்க திட்டம்; மத்திய அரசு ரத்து
ADDED : ஜூலை 29, 2024 11:32 PM
திருநெல்வேலி : தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் திருவேங்கடம், குருவிகுளம் பகுதிகளில் கிராபைட் உள்ளிட்ட கனிமம் தோண்டி எடுக்க கடந்தாண்டு நவ., 29ல் மத்திய சுரங்கத்துறையினர் இணைய வழியில் டெண்டர் விடுத்திருந்தனர்.
மத்திய அரசு சுரங்கம் தோண்டினால் தங்கள் பகுதியில் விவசாயம் பாதிக்கப்படும். நிலங்கள் வறட்சியாகும் என அப்பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ம.தி.மு.க., பொது செயலாளர் வைகோவின் சொந்த ஊரான கலிங்கப்பட்டி பகுதியில் கனிமம் சுரங்கம் அமைவதற்கு அவரும் எதிர்ப்பு தெரிவித்தார். எம்.பி., துரை, முன்னாள் தி.மு.க., நிர்வாகி ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் மத்திய அரசு குறிஞ்சாக்குளம் உள்ளிட்ட இடங்களில் அறிவித்திருந்த கிராபைட் கனிம சுரங்கம் தோண்டும் திட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. இதனை எம்.பி., துரை உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் வரவேற்றுள்ளனர்.