/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/ வீடு புகுந்து நகை பறித்த முகமூடி கும்பல் வீடு புகுந்து நகை பறித்த முகமூடி கும்பல்
வீடு புகுந்து நகை பறித்த முகமூடி கும்பல்
வீடு புகுந்து நகை பறித்த முகமூடி கும்பல்
வீடு புகுந்து நகை பறித்த முகமூடி கும்பல்
ADDED : ஜூன் 06, 2024 01:02 AM
திருநெல்வேலி:திருநெல்வேலியில் நள்ளிரவு வீடு புகுந்து ஆசிரியை, கணவரை இரும்பால் தாக்கி விடுவதாக மிரட்டி 5 பவுன் நகையை பறித்துச் சென்ற மூன்று பேர் முகமூடி கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
திருநெல்வேலி தியாகராஜநகர் மிதுலாபுரியில் வசிப்பவர் ராம லட்சுமணன். தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி விஜயா 42, தனியார் பள்ளி ஆசிரியை. நேற்று முன்தினம் இரவில் ராமலட்சுமணன், மனைவி, மகன் துாங்கிக் கொண்டிருந்தனர். அதிகாலை 3:00 மணிக்கு மூன்று பேர் மர்மகும்பல் வீட்டுக்குள் நுழைந்தனர்.
சத்தம் கேட்டு எழுந்த மூவரையும் அந்த முகமூடி கும்பல் இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்து விடுவதாக மிரட்டினர். பின்னர் விஜயா கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் செயினை பறித்துச் சென்றனர்.
இதே கும்பல் அதே பகுதியில் இன்னொரு வீட்டிலும் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பெருமாள்புரம் குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.