/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/ போலீஸ் சுருக்கெழுத்தர் கொலை 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது போலீஸ் சுருக்கெழுத்தர் கொலை 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
போலீஸ் சுருக்கெழுத்தர் கொலை 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
போலீஸ் சுருக்கெழுத்தர் கொலை 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
போலீஸ் சுருக்கெழுத்தர் கொலை 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
ADDED : ஜூலை 06, 2024 02:42 AM

திருநெல்வேலி:கோவை போலீஸ் சுருக்கெழுத்தர் சங்கரன்கோவில் அருகே வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இருவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே குருக்கள்பட்டியை சேர்ந்தவர் பெரியதுரை 30.
கோவை மாநகர போலீசில் சி.ஐ.டி., பிரிவில் (சுருக்கெழுத்தர்) ஸ்டெனோகிராபராக பணியாற்றினார். மனைவி இரண்டு குழந்தைகளுடன் கோவையில் வசித்து வந்தார்.
ஜூன் 8ல் சங்கரன்கோவில் வந்தார். குருக்கள்பட்டியைச் சேர்ந்த அவரது உறவினர் அல்லித்துரை 30, பெரியதுரையை சங்கரன்கோவிலில் இருந்து சண்முகநல்லுாருக்கு டூவீலரில் அழைத்துச் சென்றார். அங்கு அவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்தில் அல்லித்துரை மற்றும் ரவுடி அருண்குமார் கைது செய்யப்பட்டனர். இருவரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க எஸ்.பி., சுரேஷ்குமார் பரிந்துரையின் பேரில் கலெக்டர் கமல்கிஷோர் உத்தரவிட்டார்.