/உள்ளூர் செய்திகள்/தேனி/ செயற்கை நகை தயாரித்தல் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் செயற்கை நகை தயாரித்தல் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
செயற்கை நகை தயாரித்தல் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
செயற்கை நகை தயாரித்தல் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
செயற்கை நகை தயாரித்தல் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
ADDED : ஜூலை 02, 2025 07:31 AM
தேனி : கனரா வங்கி சுயதொழில் வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் செயற்கை நகை, ஆபரணங்கள் தயாரித்தல் இலவச பயிற்சி ஜூலை 7 முதல் 21 வரை நடக்க உள்ளது.
இப்பயிற்சியில் கிராமப்புறத்தை சேர்ந்த 18 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம். ப யிற்சி, உணவு, தங்குமிடம் இலவசம். பயிற்சி காலை 9:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை நடைபெறும்.
பயிற்சியில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு வங்கி கடன் ஆலோசனை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஜூலை 7 க்கு முன் ஆதார் நகல், புகைப்படத்துடன் கருவேல்நாயக்கன்பட்டி தொழிலாளர் நல அலுவலகம் அருகே உள்ள கனரா வங்கி சுயதொழில் வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகலாம். அல்லது 95003 14193 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என பயிற்சி மைய இயக்குனர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.