ADDED : ஜூலை 02, 2025 08:01 AM
தேனி; கலெக்டர் அலுவலகத்தில் பேரிடர் மேலாண்மைதுறை சார்பில் ஆப்த மித்ரா பயிற்சி அளிப்பதற்காக ரூ.20 லட்சம் மதிப்பிலான உபகரணங்களை தீயணைப்பு, போலீசார், வனத்துறைக்கு கலெக்டர் ரஞ்ஜீத்சிங் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் சமர்த்தா முன்னிலை வகித்தார்.
டி.ஆர்.ஓ., மகாலட்சுமி, கலெக்டர் நேர்முக உதவியாளர் முத்துமாதவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.