இலவச திருமணத்திற்கு விண்ணப்பிக்கலாம்
இலவச திருமணத்திற்கு விண்ணப்பிக்கலாம்
இலவச திருமணத்திற்கு விண்ணப்பிக்கலாம்
ADDED : ஜூன் 13, 2025 03:11 AM
தேனி: ஹிந்து சமய அறநிலையத்துறை மூலம் ஜூலை 2ல் இலவச திருமணங்கள் நடத்தி வைக்கப்பட உள்ளது. திருமண ஜோடிகள் எண்ணிக்கையை பொருத்து ஆண்டிபட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில், வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில், கம்பம், போடி உள்ளிட்ட இடங்களில் இலவச திருமணங்கள் நடக்கிறது. திருமணத்தின் மணமக்களுக்கு 4 கிராம் தங்கம் உட்பட ரூ.60ஆயிரம் மதிப்பில் வீட்டு உபயோக பொருட்கள் வழங்கப்படும்.
இதில் மணமக்களாக பங்கேற்க விரும்புபவர்கள் முதல்திருமண சான்று, வருமான சான்று, டி.சி., போலீஸ் நன்னடத்தை சான்று, ஆதார் நகல் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு பழனிசெட்டிபட்டியில் உள்ள ஹிந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகம், அல்லது அருகில் உள்ள அறநிலையத்துறை கோயில் அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.