/உள்ளூர் செய்திகள்/தேனி/ சிறுமிக்கு பாலியல் தொந்தரவு தொழிலாளிக்கு 4 ஆண்டு சிறை சிறுமிக்கு பாலியல் தொந்தரவு தொழிலாளிக்கு 4 ஆண்டு சிறை
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு தொழிலாளிக்கு 4 ஆண்டு சிறை
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு தொழிலாளிக்கு 4 ஆண்டு சிறை
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு தொழிலாளிக்கு 4 ஆண்டு சிறை
ADDED : செப் 23, 2025 04:52 AM
தேனி: கம்பம் ஒன்றியத்தில் உள்ள ஒரு வீட்டிற்கு கடந்த 2023 ஏப்.26ல் கட்டுமான பணிக்காக அதே பகுதியை சேர்ந்தகொடியரசன் 53, சென்றார். அப்போது 14 வயதுள்ள சிறுமி தனது வீட்டிற்கு வெளியே சுற்றித்திரிந்தகோழிகளை பிடித்துக் கொண்டிருந்தார்.
அப்போது சிறுமிக்கு கொடியரசன் பாலியல்தொந்தரவு செய்தார். சிறுமி புகாரில் உத்தமபாளையம் அனைத்து மகளிர் போலீசார் கொடியரசன் மீது போக்சோவில் கைது செய்தார்.
இந்த வழக்கு தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. விசாரணை முடிந்து நேற்று கொடியரசனுக்கு 4 ஆண்டுகள் சிறை, 10 ஆயிரம் அபராதம் விதித்து, நீதிபதி கணேசன் தீர்ப்பளித்தார்.
பாதிக்கப்பட்ட சிறுமிக்குஇழப்பீட்டு தொகையாக ரூ.50 ஆயிரம் வழங்க நீதிபதி தீர்ப்பில் தெரிவித்திருந்தார்.