/உள்ளூர் செய்திகள்/தேனி/ தேனி அரசு மருத்துவக் கல்லுாரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு தேனி அரசு மருத்துவக் கல்லுாரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு
தேனி அரசு மருத்துவக் கல்லுாரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு
தேனி அரசு மருத்துவக் கல்லுாரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு
தேனி அரசு மருத்துவக் கல்லுாரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு
ADDED : செப் 23, 2025 04:51 AM

தேனி: தேனி அரசு மருத்துவக் கல்லுாரியில் 2025 கல்வி ஆண்டின் முதலாம் ஆண்டு மாணவ மாணவிகளை வரவேற்கும் விழா நடந்தது.
கல்லுாரியில் நடந்த விழாவிற்கு முதல்வர் முத்துச்சித்ரா தலைமை வகித்தார். துணை முதல்வர் டாக்டர் தேன்மொழி, நிலைய மருத்துவர் டாக்டர் சிவக்குமரன், தேசிய மருத்துவ கழக ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சுசீலாதங்கம், மருத்துவக் கல்வித்துறையின் தலைவர் டாக்டர் அனிதா, துணை கண்காணிப்பாளர் டாக்டர் முத்து, அனைத்துத் துறைகளின் தலைவர்கள் முன்னிலை வகித்தனர்.
முதல்வர் மாணவர்களை வரவேற்று பேசுகையில்,'இம் மருத்துவக்கல்லுாரி 'ராகிங்' இல்லாத வளாகமாக உள்ளது. மாசில்லா வளாகமாக உள்ளதால் மாணவர்கள் டூவீலரில் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு, சைக்களில் சென்று வர அறிவுறுத்தி உள்ளோம்,' என்றார். நிகழ்ச்சியில் 84 மாணவர்களையும் டீன், துணை முதல்வர், ரோஜா மலர்களை கொடுத்து வரவேற்று, வெண்மை நிற டாக்டர் கோட், ஸ்டெதஸ்கோப் அணிவித்து வாழ்த்துக்களை கூறினர்.