ADDED : ஜூன் 10, 2025 02:07 AM
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே புள்ளிமான்கோம்பையைச் சேர்ந்தவர் பாலமுருகன் 55, இவரது மகள் மணிவேல்தேவி 23, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கோபி என்பவரை திருமணம் முடித்து தற்போது கணவரை பிரிந்து தந்தை வீட்டில் இரண்டு வயது பெண் குழந்தையுடன் வசித்து வருகிறார்.
மூன்று நாட்களுக்கு முன் மணிவேல்தேவியை வீட்டில் இருக்கச் சொல்லிவிட்டு பாலமுருகன் குடும்பத்துடன் வெளியூர் சென்று விட்டார்.
திரும்ப வந்து பார்த்தபோது மகள் மற்றும் பேத்தியை காணவில்லை. புகாரில் ஆண்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.