Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ஆண்டிபட்டி பகுதி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடக்குமா? சேலை கொள்முதலில் ரூ.2 கோடி நிலுவையால் திணறல்

ஆண்டிபட்டி பகுதி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடக்குமா? சேலை கொள்முதலில் ரூ.2 கோடி நிலுவையால் திணறல்

ஆண்டிபட்டி பகுதி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடக்குமா? சேலை கொள்முதலில் ரூ.2 கோடி நிலுவையால் திணறல்

ஆண்டிபட்டி பகுதி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடக்குமா? சேலை கொள்முதலில் ரூ.2 கோடி நிலுவையால் திணறல்

ADDED : ஜூன் 15, 2024 07:06 AM


Google News
ஆண்டிபட்டி கைத்தறி சரகம் சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம் பகுதியில் 7 கைத்தறி மற்றும் விசைத்தறி கூட்டுறவு சங்கங்களில் 700 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். கடந்த அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாக குழுவின் பதவிக்காலம் முடிந்து ஓராண்டுக்கும் மேலாகிறது. தற்போது நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் கைத்தறி மற்றும் துணி நூல் துறையின் தனி அலுவலர் கட்டுப்பாட்டில் உள்ளது.

லோக்சபா தேர்தலுக்குப் பின் தமிழக அரசு மூலம் கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் அறிவிப்பை பலரும் எதிர்பார்த்து உள்ளனர்.

இந்நிலையில் நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் தற்போதைய நிலை குறித்த புள்ளி விபரங்கள் அரசு சேகரித்து வருகிறது.

இதனால் அரசியல் கட்சி நிர்வாகிகள் பலரும் எந்தெந்த கூட்டுறவு சங்கங்கள் தங்களுக்கு சாதகமாக இருக்கும் என்று கணக்கு போட்டு தேர்தலை சந்திக்க இப்போதே காய்களை நகர்த்த துங்கி உள்ளனர்.

நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் கூறியதாவது:

நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் தற்போது செயல்பாட்டில் உள்ள உறுப்பினர்கள் செயல்படாத உறுப்பினர்கள், தவணை கடந்து பாக்கி வைத்துள்ள உறுப்பினர்கள், சங்கங்களின் உற்பத்தி திறன், புதிய உறுப்பினர்கள் சேர்க்கை குறித்த பல புள்ளி விபரங்கள் அரசு மூலம் சேகரிக்கப்பட்டுள்ளது. கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு அரசின் இலவச சேலை கொள்முதல் பாக்கி ரூ.2 கோடி வரை நிலுவை உள்ளது.

இதனால் சங்கங்களை தொடர்ந்து செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்கனவே உறுப்பினராக உள்ள பலருக்கும் தேர்தலில் போட்டியிடும் ஆர்வம் இல்லை. புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மூலம் கட்சி நிர்வாகிகள் நெசவாளர் கூட்டுறவு சங்க தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதற்கான திட்டமிடலை மேற்கொண்டுள்ளனர் என்றனர்.

அரசின் புள்ளி விபரம் சேகரிப்பால் கட்சியினர் ஆர்வம் காட்டவில்லை.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us