/உள்ளூர் செய்திகள்/தேனி/ 'பிரித் அனலைசர்' கருவி போடிக்கு வழங்க வலியுறுத்தல் 'பிரித் அனலைசர்' கருவி போடிக்கு வழங்க வலியுறுத்தல்
'பிரித் அனலைசர்' கருவி போடிக்கு வழங்க வலியுறுத்தல்
'பிரித் அனலைசர்' கருவி போடிக்கு வழங்க வலியுறுத்தல்
'பிரித் அனலைசர்' கருவி போடிக்கு வழங்க வலியுறுத்தல்
ADDED : ஜூன் 15, 2024 07:05 AM
போடி : மது போதையில் வாகனம் ஓட்டுவர்களை கண்டறிய 'ஆல்கஹால் பிரித் அனலைசர் 'கருவி போடி பகுதி போலீஸ் ஸ்டேஷன்களுக்கு வழங்க வலியுறுத்தி உள்ளனர்.
கேரளாவில் குடிபோதையில் வாகனங்கள் ஓட்டுபவர்களை போலீசார் எளிய முறையில் கண்டறிய கேரள அரசு 'ஆல்கஹால் பிரித் அனலைசர் கருவி' வழங்கி பல ஆண்டுகள் ஆகிறது.
வாகனங்களில் செல்பவர்கள் மதுபோதையில் இருந்தால் அவர்களது முகத்திற்கு முன்பு கொண்டு செல்லும் போது மஞ்சள் நிறத்திலும், அவரால் வாகனத்தை ஓட்ட இயலாது என்றால் சிகப்பு நிறத்திலும், போதையில் இல்லை என்றால் பச்சை லைட் சிக்னல் எரியும். இதன் மூலம் குடிபோதையில் வாகனங்கள் ஓட்டுவதை கண்டறிந்து உடனடியாக அபராதம் விதித்து வருகின்றனர். இந்த நடைமுறை கேரளாவில் 10 ஆண்டுகளுக்கு மேலாக நடைமுறையில் உள்ளதால் மதுபோதையில் வாகனங்கள் ஓட்டுவர்களின் எண்ணிக்கை குறைந்து உள்ளது.
இது போல தமிழகத்திலும் போதையில் வாகனங்களை ஓட்டுபவர்களை கண்டறிய அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களுக்கும் 'ஆல்கஹால் பிரித் அனலைசர்' கருவிகள் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்தது.
பல ஆண்டுகளாயும் போடியில் நடை முறைக்கு வராமல் உள்ளது.
இதனால் மதுபோதையில் வாகனங்கள் ஓட்டுபவர்களின் எண்ணிக்கையும் விபத்துகளும் அதிகரித்து வருகிறது. போடி பகுதியில் போதையில் வாகனங்களை ஓட்டுபவர்களை கண்டறிய ஆல்கஹால் பிரித் அனலைசர் கருவி வழங்கிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.