/உள்ளூர் செய்திகள்/தேனி/ கம்பம் பள்ளத்தாக்கு முதல் போக நெல் சாகுபடிக்கு முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீர் திறப்பு கம்பம் பள்ளத்தாக்கு முதல் போக நெல் சாகுபடிக்கு முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீர் திறப்பு
கம்பம் பள்ளத்தாக்கு முதல் போக நெல் சாகுபடிக்கு முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீர் திறப்பு
கம்பம் பள்ளத்தாக்கு முதல் போக நெல் சாகுபடிக்கு முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீர் திறப்பு
கம்பம் பள்ளத்தாக்கு முதல் போக நெல் சாகுபடிக்கு முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீர் திறப்பு
ADDED : ஜூன் 01, 2025 10:52 PM

கூடலுார்:தேனிமாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு முதல் போக நெல் சாகுபடிக்கு முல்லைப் பெரியாறு அணையில் இருந்து வினாடிக்கு 200 கன அடி நீர் திறக்கப்பட்டது.
முல்லைப் பெரியாறு அணை நீரை நம்பி கம்பம் பள்ளத்தாக்கு உத்தமபாளையம் வட்டாரத்தில் 11,807 ஏக்கர், போடி வட்டத்தில் 488 ஏக்கர், தேனி வட்டத்தில் 2,412 ஏக்கர் என இம்மாவட்டத்தில் 14,707 ஏக்கர் பரப்பில் இருபோக நெல் சாகுபடி நடந்து வருகிறது. ஆண்டுதோறும் முதல் போக நெல் சாகுபடிக்காக ஜூன் முதல் வாரத்தில் அணையில் நீர் இருப்பை பொறுத்து, தண்ணீர் திறக்கப்படும். தற்போது அணையின் நீர்மட்டம் 130.45 அடியாக இருப்பதால் (மொத்த உயரம் 152 அடி) நேற்று தண்ணீர் திறந்து விட அரசு உத்தரவிட்டது.
தேக்கடி ஷட்டரில் உள்ள மதகை இயக்கி முதல் போக சாகுபடிக்கு வினாடிக்கு 200 கன அடி நீர், குடிநீருக்கு 100 கன அடி என, மொத்தம் 300 கன அடி நீரை தேனி கலெக்டர் ரஞ்ஜீத்சிங் திறந்து வைத்தார். அணையில் நீர் இருப்பைப் பொறுத்து 120 நாட்களுக்கு திறக்கப்படும். இந்த நீரை விவசாயிகள் சிக்கனமாக பயன்படுத்தி, குறுகிய கால பயிரை நடவு செய்து, கூடுதல் மகசூல் பெற வேண்டும் என வேண்டுகோள் விடப்பட்டது. நிகழ்வில் பெரியாறு அணை செயற்பொறியாளர் செல்வம், உதவி செயற்பொறியாளர்கள் மயில்வாகனன், குமார் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து 5 ஆண்டுகள்:
கடந்த 5 ஆண்டுகளாக ஜூன் முதல் தேதியே தண்ணீர் திறக்கப்பட்டதால் இரு போக நெல் சாகுபடி பணிகளை முழுமையாக செய்ய முடிந்தது என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். 2021 ஜூன் 1ல் தண்ணீர் திறக்கும் போது நீர்மட்டம் 130.90 அடியாகவும், 2022 ஜூன் 1ல் 132.35 அடியாகவும், 2023 ஜூன் 1ல் 118.40 அடியாகவும், 2024 ஜூன் 1ல் 130.45 அடியாக இருந்தது.
முழு அளவில் உற்பத்தி:
அணை நீர்மட்டம் வெகுவாக உயர்ந்ததால் தற்போது சாகுபடிக்காக திறக்கப்பட்ட தண்ணீருடன் சேர்த்து கூடுதலாக 1622 கன அடி தமிழகப் பகுதிக்கு திறக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் லோயர்கேம்ப் பெரியாறு நீர் மின்நிலையத்தில் முழு அளவில் நான்கு ஜெனரேட்டர்களில் தலா 42 வீதம் 168 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.