/உள்ளூர் செய்திகள்/தேனி/ தி.மு.க., எதிர்ப்பு ஓட்டுகளை வாங்குவதற்காக விஜய் நாடகம் அர்ஜூன் சம்பத் காட்டம் தி.மு.க., எதிர்ப்பு ஓட்டுகளை வாங்குவதற்காக விஜய் நாடகம் அர்ஜூன் சம்பத் காட்டம்
தி.மு.க., எதிர்ப்பு ஓட்டுகளை வாங்குவதற்காக விஜய் நாடகம் அர்ஜூன் சம்பத் காட்டம்
தி.மு.க., எதிர்ப்பு ஓட்டுகளை வாங்குவதற்காக விஜய் நாடகம் அர்ஜூன் சம்பத் காட்டம்
தி.மு.க., எதிர்ப்பு ஓட்டுகளை வாங்குவதற்காக விஜய் நாடகம் அர்ஜூன் சம்பத் காட்டம்
ADDED : செப் 22, 2025 03:50 AM
தேனி: ''தி.மு.க., எதிர்ப்பு ஓட்டுகளை தன் கட்சிக்கு வாங்குவதற்காக தமிழக வெற்றிக்கழகம் தலைவர் விஜய் நாடகம் போடுகிறார்,'' என, தேனியில் ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன்சம்பத் குற்றம் சாட்டினார்.
அவர் கூறியதாவது: ஜி.எஸ்.டி., குறைப்பால் விலைவாசி குறையும்.இதனை தீபாவளி பரிசாக பிரதமர் மோடி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வழங்கி உள்ளனர்.
ஆனால் இந்த பலன் தமிழக மக்களுக்கு சென்றடைவதை தடுக்கும் வகையில் தி.மு.க., அவதுாறு பிரசாரம் செய்கிறது. பா.ஜ.,விற்கு ஓட்டளிப்பவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கும் பணியை அதிகாரிகள் மூலம் தி.மு.க., செய்து வருகிறது.
'இண்டி' கூட்டணி கட்சியினர், நடிகர்கள் பிரகாஷ்ராஜ், சத்யராஜ் உள்ளிட்டோர் காசா பிரச்னைக்கு குரல் கொடுக்கின்றனர்.
பஹல்காம் தாக்குதல், வங்கதேசத்தில் சிறுபான்மை ஹிந்துக்கள் மீது தாக்குதல், கோவை குண்டு வெடிப்பு பற்றி பேசவில்லை. காசாவில் தாக்குதலுக்கு மோடி காரணம் என்கின்றனர்.
ஆனால், இந்திய அரசு தான் காசாவில் போர் நிறுத்தம் செய்வது பற்றி பேசிவருகிறது.
அவர்களுக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்புகிறது. அப்படி இருக்கையில் இவ்வாறு குற்றம் சாட்டுவது தமிழக வாக்காளர்களை மத அடிப்படையில் பிரிப்பதற்கான முயற்சி. இவர்கள் தி.மு.க.,விற்கு ஓட்டு வாங்க இதை செய்கின்றனர்.
தேர்தல் ஆணையம் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வைக்கும் ராகுல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நேர்மையாக நடக்க, 6 மாதங்களுக்கு முன் தி.மு.க., அரசை 'சஸ்பெண்ட்' செய்ய வேண்டும். தி.மு.க.,விற்கு எதிராக பேசுபவர்களை கைது செய்வதை கண்டிக்கிறோம்.
கடந்த சட்டசபை தேர்தலில் கமல் செய்ததை இந்த தேர்தலில் த.வெ.க., தலைவர் விஜய் செய்கிறார். தி.மு.க., எதிர்ப்பு ஓட்டுக்கள் தன் கட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக அவர் நாடகம் நடத்துகிறார் என்றார்.