/உள்ளூர் செய்திகள்/தேனி/ வீரபாண்டி சித்திரை திருவிழா16 லட்சம் பக்தர்கள் தரிசனம் வீரபாண்டி சித்திரை திருவிழா16 லட்சம் பக்தர்கள் தரிசனம்
வீரபாண்டி சித்திரை திருவிழா16 லட்சம் பக்தர்கள் தரிசனம்
வீரபாண்டி சித்திரை திருவிழா16 லட்சம் பக்தர்கள் தரிசனம்
வீரபாண்டி சித்திரை திருவிழா16 லட்சம் பக்தர்கள் தரிசனம்
ADDED : மே 30, 2025 03:31 AM
தேனி: வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் எட்டு நாட்கள் நடந்த சித்திரை திருவிழாவில் 16 லட்சம் பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்துள்ளனர் என கோயில் செயல் அலுவலர் நாராயணி தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது: இக்கோயில் சித்திரை திருவிழா மே 6 முதல் 13 வரை நடந்தது.
கோயில் வளாகத்தில் தற்காலிக உண்டியல் எண்ணிக்கை கடந்த ஏப்.27 ல் நடந்தது. அதில் ரூ.11.25 லட்சம் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.
அதுதவிர 12 இடங்களில் நிரந்த உண்டியல்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
அதற்கான எண்ணிக்கை ஜூன் 5ல் நடக்க உள்ளது.
திருவிழா நடந்த 8 நாட்களில் ஆந்திரா, கேரளா, மாநிலங்களில் இருந்து, பிற மாவட்டங்களில் இருந்தும் 16 லட்சம் பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.
இவ்விழாவில் பக்தர்களுக்கான வசதிகள் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன என்றார்.