பொதுமக்களிடம் கலந்துரையாடிய கலெக்டர்
பொதுமக்களிடம் கலந்துரையாடிய கலெக்டர்
பொதுமக்களிடம் கலந்துரையாடிய கலெக்டர்
ADDED : மே 30, 2025 03:31 AM
கம்பம்: கம்பத்தில் ஆய்வுக்கு சென்ற கலெக்டர் ரஞ்ஜீத் சிங் டீ கடைக்கு சென்று பொதுமக்களோடு அமர்ந்து கலந்துரையாடினார்.
கம்பம் அரசு மருத்துவமனைக்கு நேற்று காலை கலெக்டர் ரஞ்ஜித் சிங் வந்தார். அங்கு ரூ.10 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பிரசவ மேம்பாட்டு கட்டடத்தை விரைந்து கட்டி முடிக்க அறிவுறுத்தினார். தொடர்ந்து அரசு மருத்துவமனையை சுற்றிப் பார்த்து, மருந்து மாத்திரைகள் முறையாக தரப்படுகிறதா என்றும், இருப்பு பற்றியும் விசாரித்தார். மருத்துவ அலுவலர் பானுமதி, நகராட்சி தலைவர் வனிதா, பொறியாளர் அய்யனார் உடன் இருந்தனர்.பின்னர் வடக்கு போலீஸ் ஸ்டேஷன் எதிரில் உள்ள டீ கடைக்கு சென்று பொதுமக்களோடு அமர்ந்து டீ குடித்தார். அங்கிருந்தவர்களிடம் பாலிதீன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும், குழந்தைகளை வேலைக்கு அனுப்பாமல் பள்ளிக்கு அனுப்ப வேண்டும், இடைநிற்றல் இருக்க கூடாது என வலியுறுத்தினார். 10 நிமிடங்கள் டீ கடையில் உட்கார்ந்து பொதுமக்களுடன் கலந்துரையாடினார்.