/உள்ளூர் செய்திகள்/தேனி/ மானியத்தில் சிப்பம் கட்டும் அறை திட்டம் செயல்படுத்த வலியுறுத்தல் மானியத்தில் சிப்பம் கட்டும் அறை திட்டம் செயல்படுத்த வலியுறுத்தல்
மானியத்தில் சிப்பம் கட்டும் அறை திட்டம் செயல்படுத்த வலியுறுத்தல்
மானியத்தில் சிப்பம் கட்டும் அறை திட்டம் செயல்படுத்த வலியுறுத்தல்
மானியத்தில் சிப்பம் கட்டும் அறை திட்டம் செயல்படுத்த வலியுறுத்தல்
ADDED : செப் 17, 2025 07:37 AM
தேனி : சிப்பம் கட்டும் அறைக்கு மானியம் வழங்கும் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என விவசாயிகள் தோட்டக்கலைத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
விவசாயிகள் காய்கறிகளை உற்பத்தி செய்து சிப்பம் கட்டும் அறை, அல்லது மரத்தடிகளில் காய்கறிகளை தரம்பிரிக்கின்றனர். பின் அதனை சிப்பங்களாக கட்டி விற்பனைக்கு அனுப்புகின்றனர். தரம் பிரிக்கும் பணிக்கு தனியாக தகர செட் அமைத்துள்ள இடங்களில் மழைகாலத்திலும் இப்பணிகள் நடக்கிறது. ஆனால், மரத்தடியில் தரம்பிரித்து, சிப்பம் கட்டும் விவசாயிகள் மழைகாலங்களில் சிரமத்திற்கு ஆளாகுகின்றனர். இதற்காக தோட்டக்கலைத்துறை சார்பில் கடந்த ஆண்டுகளில் மானியத்துடன் சிப்பம் கட்டும் அறைகள் விவசாயிகளுக்கு அமைத்து தரப்பட்டது. ஆனால், இந்த திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுள்தாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இத்திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.