/உள்ளூர் செய்திகள்/தேனி/ தேர்தல் ஆலோசனை கூட்டங்களில் ஆர்வம் காட்டாத கட்சி நிர்வாகிகள் தேர்தல் ஆலோசனை கூட்டங்களில் ஆர்வம் காட்டாத கட்சி நிர்வாகிகள்
தேர்தல் ஆலோசனை கூட்டங்களில் ஆர்வம் காட்டாத கட்சி நிர்வாகிகள்
தேர்தல் ஆலோசனை கூட்டங்களில் ஆர்வம் காட்டாத கட்சி நிர்வாகிகள்
தேர்தல் ஆலோசனை கூட்டங்களில் ஆர்வம் காட்டாத கட்சி நிர்வாகிகள்
ADDED : செப் 17, 2025 07:37 AM
தேனி : மாவட்டத்தில் நடக்கும் தேர்தல் ஆலோசனைக் கூட்டங்களில் அரசியல் கட்சி நிர்வாகிகள் பங்கேற்க ஆர்வமின்றி உள்ளதால் தேர்தல் ஆணைய அறிவிப்புகள், விழிப்புணர்வு தகவல்களை தேர்தலில் களப்பணியாற்றும் கட்சியினருக்கு கொண்டு சேர்ப்பதில் சிரமம் நிலவுகிறது.
தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான ஆயத்த பணிகளை தேர்தல் ஆணையம் துவங்கி உள்ளது. அவ்வப்போது அரசியல் கட்சியினருடன் மாவட்ட, மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டங்கள் நடத்துகின்றனர்.
மாவட்ட அளவிலான கூட்டங்களில் அங்கிகரீக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கு தபால், அலைபேசி மூலம் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. ஒருசில அரசியல் கட்சியினர் ஆலோசனைக்கூட்டங்களில் பங்கேற்கின்றனர்.முக்கிய கட்சியினர் ஆலோசனைக்கூட்டங்களில் பங்கேற்பது இல்லை.
ஒரு சில கட்சிகளில் ஒவ்வொரு கூட்டத்திற்கும் ஒரு நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.
இதனால் தேர்தல் ஆணையம் கூறும் அறிவுரைகள் கட்சியனருக்கு சென்றடைவதில் சிரமம் ஏற்படுகிறது. மாவட்ட அளவிலான கூட்டங்களில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கேற்க வேண்டும். இக் கூட்டங்களில் ஒரே நிர்வாகி தொடர்ச்சியாக பங்கேற்க செய்ய வேண்டும்.
அவ்வாறு செய்வதன் மூலம் முந்தைய கூட்டங்களில் என்ன ஆலோசனை நடத்தப்பட்டன என்பது தெரிந்திருக்கும். அதற்கு ஏற்ப கோரிக்கைகள் வைக்க இயலும் என தேர்தல் பிரிவு அலுவலர்கள் தெரிவித்தனர்.