/உள்ளூர் செய்திகள்/தேனி/ பலத்த காற்றால் இடிந்த பழங்குடியினர் வீடு பலத்த காற்றால் இடிந்த பழங்குடியினர் வீடு
பலத்த காற்றால் இடிந்த பழங்குடியினர் வீடு
பலத்த காற்றால் இடிந்த பழங்குடியினர் வீடு
பலத்த காற்றால் இடிந்த பழங்குடியினர் வீடு
ADDED : மே 30, 2025 03:33 AM

கூடலுார்: கூடலுார் அருகே லோயர்கேம்ப் பளியன்குடியில் பலத்த காற்று மழையால் பழங்குடியினரின் வீடு இடிந்தது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் இரவில் துாங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
லோயர்கேம்ப் பளியன்குடியில் 53 குடும்பங்களைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர்.
மங்கலதேவி கண்ணகி கோயில் மலை அடிவாரத்தில் வனப்பகுதியில் அமைந்துள்ள இங்கு 50 ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய அரசு வீடு கட்டி கொடுத்தது.
ஆனால் இதை சீரமைக்க முடியாமல் பல வீடுகள் சேதம் அடைந்தன. தேர்தல் நேரத்தில் மட்டும் வேட்பாளர்கள் புதியதாக வீடு கட்டிக் கொடுப்பதாக வாக்குறுதி மட்டுமே கொடுத்து வந்தனர். பல வீடுகளில் கூரை முழுவதும் சேதம் அடைந்து வசிக்க முடியாத நிலையில் ஏற்பட்டுள்ளது. சிலர் தற்காலிகமாக சீரமைத்து வசித்து வந்தனர்.
சமீபத்தில் பளியன்குடிக்கு வந்த எம்.பி., தங்க தமிழ்ச்செல்வன் 53 வீடுகள் புதியதாக கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
இந்நிலையில் நேற்று பலத்த காற்று மழையால் ஒரு வீடு இடிந்தது. வீட்டிற்குள் யாரும் இல்லாததால் உயிர் பலி தவிர்க்கப்பட்டது. அதிகமான வீடுகள் இது போன்ற நிலையில் இருப்பதாலும் தொடர்ந்து கன மழை பெய்து வருவதாலும் இரவு நேரத்தில் மக்கள் தூங்க முடியாமல் தவித்து வருகின்றனர். அவசர நடவடிக்கையாக புதியதாக வீடுகள் கட்டிக் கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.