/உள்ளூர் செய்திகள்/தேனி/ 'லிப்ட்' டில் சிக்கி நகைக்கடை உரிமையாளர் பலி 'லிப்ட்' டில் சிக்கி நகைக்கடை உரிமையாளர் பலி
'லிப்ட்' டில் சிக்கி நகைக்கடை உரிமையாளர் பலி
'லிப்ட்' டில் சிக்கி நகைக்கடை உரிமையாளர் பலி
'லிப்ட்' டில் சிக்கி நகைக்கடை உரிமையாளர் பலி
ADDED : மே 30, 2025 03:35 AM

மூணாறு: இடுக்கி மாவட்டம், கட்டப்பனையில் நகைக்கடையில் கட்டுப்பாட்டை இழந்த 'லிப்ட்' மேல் தளத்தில் மோதியதால், அதனுள் சிக்கிய உரிமையாளர் பலத்த காயமடைந்து இறந்தார்.
கட்டப்பனையைச் சேர்ந்த சன்னி பிரான்சிஸ் 65, க்கு, நகரில் புளியன் மலை ரோட்டில் ஐந்து தளங்களைக் கொண்டநகைக்கடை உள்ளது.
அதில் உள்ள 'லிப்ட்' டில் சன்னிபிரான்சிஸ் நேற்று முன்தினம் சென்றபோது திடீரென மின்தடை ஏற்பட்டது. அதனால் பாதி வழியில் நின்ற லிப்ட் திடீரென கட்டுப்பாட்டை இழந்து மேல் நோக்கி வேகமாக சென்று பலமாக மோதியது.
அதில் லிப்ட் முற்றிலுமாக சேதமடைந்த நிலையில், அதனுள் சிக்கிய சன்னிபிரான்சிஸ்சை ஊழியர்கள் மீட்க முயன்றும் இயலவில்லை.சன்னிபிரான்சிஸ்சை மீட்டு கட்டப்பனையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். சன்னிபிரான்சிஸ்சை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். கட்டப்பனை போலீசார் விசாரிக்கின்றனர்.