ADDED : ஜன 05, 2024 05:19 AM
தேனி : பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் கலைக் கல்லுாரியில் மாநில அறிவியல் தொழில்நுட்ப கழகம் சார்பில் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி நடந்தது.
கல்லுாரி முதல்வர் சேசுராணி தலைமை வகித்தார். தொடக்க கல்வி மாவட்ட அலுவலர் ஜான்சன், கல்லுாரி செயலாளர் குயின்ஸ்லி ஜெயந்தி, விலங்கியல் துறைத்தலைவர் கேத்ரின் அலெக்ஸாண்டர் உள்ளிட்டோர் பேசினர். பயிற்சியில் ஆசிரியர்களுக்கு அறிவியல் தொழில்நுட்பங்களை பயன்படுத்துதல் பற்றி விளக்கப்பட்டது. பயிற்சியை கல்லுாரி விலங்கியல்துறை பேராசிரியர்கள் ஒருங்கிணைத்தனர்.